இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்களுடைய பணத்தைச் சேமிப்பதற்கான முக்கியமான வழியாக இந்திய அஞ்சல் துறை செயல்பட்டு வருகிறது.
வளர்ச்சியடையாத பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆபத்து இல்லாத மற்றும் நல்ல வருமானத்தை வழங்க கூடிய பல சேமிப்பு திட்டங்களை (savings schemes) இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தி உள்ளது. கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் (Rural Postal Life Insurance Schemes Program) கீழ், பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் கிராம் சுரக்ஷா யோஜனா (Gram Suraksha Yojna) மிகவும் பிரபலமானது.
வரும் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்.. பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
போஸ்ட் ஆஃபிஸ் கிராம் சுரக்ஷா யோஜனா என்பது எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசிக்கு மாற்றுவதற்கான விருப்பத்தின் கூடுதல் அம்சத்துடன் கூடிய முழு ஆயுள் காப்பீட்டு பாலிசியாகும். பாலிசியின் கீழ், பாலிசிதாரர் 55, 58 அல்லது 60 வயது வரை குறைந்த பிரீமியங்களை செலுத்தி அதிகபட்ச பலன்களை பெறலாம். கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களின் முக்கிய நோக்கம் பொதுவாக மக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கிராமப்புற மக்களுக்கு காப்பீடு வழங்குவது, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நலிவடைந்த பிரிவினர்,பெண் தொழிலாளர்கள் பயன் பெறுவது ஆகும்.
போஸ்ட் ஆஃபிஸ் கிராம் சுரக்ஷா யோஜனா பாலிசி: தகுதி, அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
India Post வழங்கும் போஸ்ட் ஆஃபிஸ் கிராம் சுரக்ஷா யோஜனா பாலிசியின் முக்கிய அம்சங்கள், நன்மைகள் மற்றும் இந்த பாலிசியை எடுப்பதற்கான தகுதிகள் பற்றி இப்போது பார்க்கலாம்...
* இந்த பாலிசியை எடுப்பதற்கான குறைந்தபட்ச வயது 19, அதிகபட்ச வயது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 10,000, அதிகபட்சம் ரூ.10 லட்சம்
* 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வசதி உண்டு
* பாலிசிதாரர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்யலாம்
* ஒருவேளை இந்த பாலிசிதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு முன் பாலிசியை சரண்டர் செய்தால் அவர்களுக்கு போனஸ் பெறும் தகுதி கிடையாது
* பிரீமியம் செலுத்தும் வயதை 55, 58 அல்லது 60 வயதாக தேர்வு செய்து கொள்ளலாம்
LIC தரும் அசத்தலான வாய்ப்பு.. ரூ. 55 லட்சத்தை சொந்தமாக்க தினமும் ரூ. 253 சேமியுங்கள்!
தினமும் ரூ.50 செலுத்தி ரூ.35 லட்சம் வரை திரும்ப பெறலாம்..
கிராம் சுரக்ஷா யோஜ்னா பாலிசியின்படி ஒரு நபர் திட்டத்தின் கீழ் பாலிசி மதிப்பு ரூ.10 லட்சமாக இருந்தால், மாதம் ரூ.1,515 முதலீடு செய்தால் (ஒரு நாளைக்கு ரூ.50) அவருக்கு மெச்சூரிட்டிக்கு பின் சுமார் ரூ.35 லட்சம் வரை கிடைக்கும். அதாவது இந்த பாலிசியில் முதலீடு செய்வோர் 55 ஆண்டு காலத்திற்கு ரூ.31,60,000, 58 ஆண்டுகளுக்கு ரூ.33,40,000 மற்றும் 60 ஆண்டுகளுக்கு ரூ.34.60 லட்சம் வரை மெச்சூரிட்டி பெனிஃபிட்டை பெறுவார்கள்.
18 வயதில் இந்த திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்ய தொடங்கினால், 55 ஆண்டுகள் வரை ரூ.1,515 பிரீமியமாக செலுத்தலாம். பிரீமியத்தை செலுத்த வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. காப்பீட்டுக் காலத்தின் போது குறைபாடு ஏற்பட்டால், வாடிக்கையாளர் நிலுவைத் தொகையைச் செலுத்தி கவரேஜை மீண்டும் தொடங்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.