கிராம் சுரக்ஷா திட்டம் என்பது அஞ்சல் அலுவலகத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும். நீங்கள் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட விரும்பினால், இந்தத் திட்டத்தை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
போஸ்ட் ஆபீஸை பொறுத்தவரையில் நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடு, 5 ஆண்டு முதலீடு, பென்சன், மாத வட்டி என நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொறுத்து உங்கள் வருவாய் மாறுபடுகிறது. ஆனால் லாபம் என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும். இந்திய தபால் துறை சிறப்பான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இத்திட்டங்களில் நல்ல வருவாய் கொடுக்கும் திட்டமாக கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் உள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், ஒருவர் மாதம் ரூ.1411 முதலீடு செய்யலாம் மற்றும் முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் பெற முடியூம்.
FIXED DEPOSIT : வட்டியை உயர்த்திய பிரபல வங்கி.. டெபாசிட் செய்ய இதுதான் சரியான நேரம்!
திட்டத்தின் அம்சங்கள்:
19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இதில் ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 10,000 மற்றும் அதிகபட்ச தொகை 10 லட்சம் ஆகும்.பிரீமியம் செலுத்த 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். பாலிசி காலத்தை தவறவிட்டாலும் மீதமுள்ள பிரீமியத்தை செலுத்தி பாலிசியை புதுப்பித்துக்கொள்ளலாம்.இது ஒரு முழு ஆயுள் காப்பீட்டுக் கொள்கையாகும், மேலும் பாலிசியை எடுத்து ஐந்தாண்டுகளின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான கூடுதல் அம்சமும் உள்ளது.
state bank : பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி உயர போகிறது! எஸ்பிஐ சொன்ன குட் நியூஸ்
19 வயது முதலீட்டாளர் 55 வயது வரை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியமாகச் செலுத்த வேண்டும்.
58 வயது வரை முதலீடு செய்ய அவர் ரூ.1463 டெபாசிட் செய்ய வேண்டும் மற்றும் 60 வயது வரை, முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக ரூ.1411 டெபாசிட் செய்ய வேண்டும்.
55 வயதில் முதலீட்டாளர் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சமும் பெறுவார்கள்.
கிராம் சுரக்ஷா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் கடன் வசதி உட்பட பல நன்மைகளைப் பெறுவீர்கள். இருப்பினும், திட்டத்தில் 4 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு மட்டுமே இது கிடைக்கும்.பணத்தை மாதந்தோறும், காலாண்டு அல்லது ஆண்டுதோறும் டெபாசிட் செய்யலாம்.அவசர காலங்களில், 30 நாட்கள் சலுகை காலம் அனுமதிக்கப்படுகிறது.முதலீடு செய்த நாளில் இருந்து, பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.5 ஆண்டுகளுக்கு முன் மூடினால் போனஸுக்கு தகுதியில்லை
இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்களை அறிய இந்தியா போஸ்ட்டின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.