• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் சேமித்தால் லாபம் நிச்சயம்..ஆபத்து இல்லாத முதலீடு!

போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் சேமித்தால் லாபம் நிச்சயம்..ஆபத்து இல்லாத முதலீடு!

போஸ்ட் ஆபீஸ் திட்டம்

போஸ்ட் ஆபீஸ் திட்டம்

அஞ்சலக டெர்ம் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் டெபாசிட் செய்து சேமிப்பைத் தொடங்க முடியும்.

  • Share this:
    அஞ்சல் சேமிப்பில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் கண்டிபாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அஞ்சல் சேமிப்பு திட்டங்கள்

    நல்ல வருமானம்..கை நிறைய லாபம் இவற்றை மனதில் கொண்டு பெரும்பாலான மக்கள் அஞ்சல் சேமிப்பில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது. உண்மை தான். அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிப்பவையாக உள்ளன. இது ஆபத்து இல்லாத முதலீடாகவும் கருதப்படுகிறது.வங்கி கணக்குகளை போலவே இதிலும் இணையதள வங்கிச்சேவை மற்றும் செக் புக் போன்ற சேவைகளும் கிடைக்கும்.ஒருவேளை நீங்களும் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் கண்டிபாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் இவை தான்.

    அஞ்சலக டெர்ம் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் டெபாசிட் செய்து சேமிப்பைத் தொடங்க முடியும். வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் அஞ்சலகத்தில் டெர்ம் டெபாசிட் பெயரில் பெறலாம். இந்தத் திட்டத்தில் ஒரு வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை 5 சதவீதமும், 5 வருடம் முதலீடு செய்யும் போது 6.7 சதவீத லாபத்துடன் வரி விலக்கும் கிடைக்கும்.அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இது 5 வருடத்திற்குப் பிறகு 6.6% சதவீத லாபத்துடன் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் திரும்பப் பெற முடியும். இதுவே ஜாயிண்ட் கணக்காக இருந்தால் அதிகட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

    பெண் குழந்தைகளுக்கான இந்த செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில், முதலீடு செய்யும் போது, ஆண்டுக்கு 7.6 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். மேலும் தொடர்ந்து 15 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய முடியும். ஆண்டுக்குக் குறைந்தது 1,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை 12 தவணைகளாக முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பிய பிறகு செல்வ மகள் சேமிப்பு கணக்கு தானாக மூடப்படும். அதன் பிறகு கூடுதலாக எத்தனை ஆண்டுகள் இந்தக் கணக்கில் பணம் இருந்தாலும் கூடுதல் லாபம் ஏதும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.தேசிய சேமிப்புப் பத்திர திட்டத்தில் 5 வருடம் முதல் 10 வருடம் வரை மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்யலாம். அதில் 6.8% சதவீத லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்த முதலீட்டுத் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் பெற முடியும்.

    5 வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்தால் 5.8% சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். மேலும் மாதம் 10 ரூபாய் முதலீட்டில் அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்க முடியும்.கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 6.9 சதவீத வட்டி விகித லாபம் பெறக்கூடிய இந்தத் திட்டத்தின் கீழ், 112 மாதங்களுக்கு முதலீடு செய்யும் போது இரட்டிப்பாக அந்த லாபம் கிடைக்கும்.
    மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் 55 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் முதலீடு செய்ய முடியும் என்பதோடு அதில் 7.4 சதவீத லாபமும் கிடைக்கும். குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: