Home /News /business /

மாதம் ரூ.2500 உங்கள் அக்கவுண்டுக்கு வந்து விடும்.. போஸ்ட் ஆபீஸில் இதை செய்து வையுங்கள்!

மாதம் ரூ.2500 உங்கள் அக்கவுண்டுக்கு வந்து விடும்.. போஸ்ட் ஆபீஸில் இதை செய்து வையுங்கள்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

குழந்தைகளின் நல்வாழ்வுக்கான பிற அம்சங்களில் முதலீடு செய்ய இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அதிக வருமானத்துடன் கூடிய ஆபத்து இல்லாத முதலீடுகளை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தபால் அலுவலக சேமிப்பு  மிகவும் பிரபலமான தீர்வுகளில் ஒன்றாகும். இங்கு சேமிப்பு மற்றும் முதலீடு இரண்டுமே கைக்கொடுக்கிறது. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் பிரபலமான சேமிப்பு திட்டத்தில் MIS எனப்படும் மாத வருமான திட்டத்தின் வட்டி விகிதம் 6.6% ஆகும். இது பல வங்கிகளின் நிலையான வைப்பு விகிதங்களை விட அதிகமாகும்.

    இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்கள் முதலீடு செய்யப்பட்ட விகிதத்தில் நிலையான வருமானத்தை  பெற உறுதி செய்கிறது. அதாவது, வட்டி விகிதங்கள் பின்னர் குறைக்கப்பட்டாலும் அதை பற்றி முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த வகையான சேமிப்பு திட்டத்தை தொடங்க விரும்பினாலும் அதற்காக வழிமுறைகள் இதோ.

    போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் வட்டி குறித்து முக்கிய அறிவிப்பு!

    கணக்கைத் தொடங்க குறைந்தபட்சத் தொகை ரூ. 1,000 . அதைத் தொடர்ந்து, தபால் துறை விதிமுறைகளின்படி, ரூ.1,000 மடங்குகளில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த விதி ஏப்ரல் 1, 2020 முதல் அமலுக்கு வந்தது. ஒரு கணக்கிற்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.4.5 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.9 லட்சம். தனிநபர்கள் 4.5 லட்சம் வரை MIS இல் முதலீடு செய்யலாம் (கூட்டு கணக்குகளில் அவரது பங்கு உட்பட). கூட்டுக் கணக்கில் ஒரு தனிநபரின் பங்கைக் கணக்கிடுவதற்கு ஒவ்வொரு கூட்டுக் கணக்கிலும் ஒவ்வொரு கூட்டு வைத்திருப்பவருக்கும் சமமான பங்கு உள்ளது.

    Aadhaar - PAN : லிங்க் செய்ய இன்றே கடைசி நாள்.. செய்ய தவறினால் ரூ. 1000 அபராதம்!

    மைனர் சார்பாக அவரின் பாதுகாவலர் அஞ்சல் அலுவலக MIS கணக்கைத் திறக்கலாம், 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் தனது சொந்த பெயரில் கணக்கைத் தொடங்கலாம். பெற்றோர்கள் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் வட்டியை தங்கள் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த அல்லது தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்கான பிற அம்சங்களில் முதலீடு செய்ய இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    நீங்கள் ஒரு கணக்கைத் திறந்து ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தால், தற்போதைய ஆண்டு வட்டி விகிதத்தில் மாதம் ரூ.1,100 பெறுவீர்கள். மாறாக, குழந்தையின் பெயரில் ரூ.3.50 லட்சம் டெபாசிட் செய்தால், வட்டியாக ரூ.1,925 கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.4.5 லட்சத்தை முதலீடு செய்தால், மாதம் ரூ.2,475 வட்டியாகப் பெறுவீர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Post Office, Savings

    அடுத்த செய்தி