போஸ்ட் ஆபீஸில் ரூ. 417 சேமிப்பதன் மூலம் பயனர்களை லட்சாதிபதி ஆக்கும் சூப்பரான சேமிப்பு திட்டம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
தற்போதைய சூழலில் சந்தை நகர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் நிலையான மற்றும் அதிக வருமானத்தைப் பெற விரும்புவோர் அரசு சேமிப்புத் திட்டங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பொது வருங்கால வைப்பு நிதி அல்லது PPF திட்டம் அரசால் தொடங்கப்பட்டது. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் பல சிறு சேமிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் இது நிலையான மற்றும் அதிக வருமானத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரி சேமிப்பு சலுகையையும் வழங்குகிறது.
வயதான பின்பு கை நிறைய பென்சன் வாங்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!
முதலீட்டாளர்கள் தங்கள் பிபிஎஃப் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். பொது வருங்கால வைப்பு நிதி அல்லது PPF என்பது அதிக வட்டி வழங்கும் ஆபத்து இல்லாத திட்டங்களில் ஒன்றாகும். PPF வட்டி விகிதம் தற்போது 7.1 சதவீதமாக உள்ளது, இது வங்கி FDகளை விட மிக அதிகம். முதலீட்டாளர்கள் தங்கள் PPF கணக்கில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் வரை தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். இருப்பினும், ஒருவருக்கு 15 வருட முடிவில் பணம் தேவையில்லை என்றால், PPF கணக்கின் காலத்தை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளலாம். PPF கணக்கு நீட்டிப்பு படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் ஐந்து வருடம் கூடுதலாக சேர்க்க முடியும்
உங்கள் PPF கணக்கில் ஒரு நாளைக்கு 417 ரூபாய் முதலீடு செய்தால், மாத முதலீட்டு மதிப்பு சுமார் 12,500 ரூபாய். அதாவது, ஒரு வருடத்திற்கு, நீங்கள் உங்கள் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ரூ. 1,50,00 க்கும் சற்று அதிகமாக முதலீடு செய்கிறீர்கள், இது அதிகபட்ச வரம்பாகும். 15 ஆண்டுகளில், திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூ. 40.58 லட்சமாக இருக்கும்
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கான விதிமுறைகள் மாற்றம்!
இதை 35 வயது முதல் 60 வயது வரை அதாவது 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து செய்து வந்தால், முதிர்வு காலத்தில் கிடைக்கும் தொகை ரூ.1.03 கோடியாக இருக்கும். இந்தத் தொகை முற்றிலும் வரி விலக்கு மற்றும் மொத்த வட்டி கிட்டத்தட்ட 66 லட்சமாக இருக்கும். உங்கள் ஓய்வு பெறும் வயது வரை 25 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்திருக்கும் மொத்தத் தொகை ரூ.37 லட்சமாக இருக்கும்.இந்த திட்டத்தில் மாதந்தோறும் வட்டி கணக்கிடப்படுவதால், ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.