• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 5 வருஷத்துக்கு வங்கி தர வட்டியை விட இங்கு அதிகம்! பணத்தை பிளான் பண்ணி சேமியுங்கள்

5 வருஷத்துக்கு வங்கி தர வட்டியை விட இங்கு அதிகம்! பணத்தை பிளான் பண்ணி சேமியுங்கள்

லாபம் தரும் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ்

லாபம் தரும் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ்

post office savings : மிடில் கிளாஸ் மக்கள் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸில் இருக்கும் அருமையான திட்டங்களை யூஸ் பண்ணிக்கோங்க

  • Share this:
    போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ், வங்கியைக் காட்டிலும் நல்ல வட்டியைத் தருகிறது. மிடில் கிளாஸ் மக்கள் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸில் இருக்கும் அருமையான திட்டங்களை யூஸ் பண்ணிக்கோங்க.

    தற்போதைய பரபரப்பான உலகில் மக்களிடையே சேமிப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. ஆடம்பர செலவுகள் அதிகமான இந்த காலக்கட்டத்தில் லோன்கள், இஎம்ஐ-கள் தான் அதிகமே தவிர. சேமிப்பு மிகக்குறைவு.

    மிடில் கிளாஸ் மக்களை எடுத்துக்கொண்டால் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் எங்கு? எப்படி? எது லாபம்? யாரை கேட்கலாம்? இதுப்போன்ற சந்தேகங்களால் சேமிப்பை ஹோல்டில் போட்டு விடுவார்கள். இனியும் சந்தேகம் வேண்டாம். வங்கியை விட அதிக வட்டி, லாபம் தரும் அஞ்சலக சேமிப்பைத் தேர்ந்தெடுங்கள். கை நிறைய லாபம் பார்ப்பீர்கள். இதோ போஸ்ட் ஆஃபிஸில் இருக்கும் சில சேமிப்பு திட்டங்கள் உங்கள் கவனத்திற்கு.

    தேசிய சேமிப்புப் பத்திரம்: 5 வருடம் முதல் 10 வருடம் சேமிப்புக்காலம். அதில் 8 சதவீத லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்த முதலீட்டுத் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் பெற முடியும்.

    மாதாந்திர வருவாய் திட்டம்: இதில் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இது 5 வருடத்திற்குப் பிறகு 7.3 சதவீத லாபத்துடன் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் திரும்பப் பெற முடியும். இதுவே ஜாயிண்ட் கணக்காக இருந்தால் அதிகட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

    டெர்ம் டெபாசிட்: 200 ரூபாய் முதல் டெபாசிட் செய்து சேமிப்பைத் தொடங்கங்கலாம் வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் அஞ்சலகத்தில் டெர்ம் டெபாசிட் பெயரில் பெறலாம். இந்தத் திட்டத்தில் ஒரு வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை 7 சதவீதமும், 5 வருடம் முதலீடு செய்யும் போது 7.8 சதவீத லாபத்துடன் வரி விலக்கும் கிடைக்கும்.

    இவையெல்லாம் ஒருசில திட்டங்கள் மட்டுமே. இதுப்போன்ற பலநூரு திட்டங்கள் அஞ்சலக சேமிப்பில் செயல்பாட்டில் உள்ளனர். ஒருமுறை நேரில் சென்று விசாரியுங்கள் நல்ல முடிவை எடுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: