முகப்பு /செய்தி /வணிகம் / போஸ்ட் ஆபீஸில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் தொடங்கியவர்கள் கவனத்திற்கு.. இந்த அப்டேட் பற்றி தெரியுமா?

போஸ்ட் ஆபீஸில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் தொடங்கியவர்கள் கவனத்திற்கு.. இந்த அப்டேட் பற்றி தெரியுமா?

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபிஸில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ரெக்கரிங் டெபாசிட் திட்டம், பிபிஎஃப், செல்வ மகள் சேமிப்பு திட்டத்துக்கு ஆன்லைன் வழியே மாத தொகை கட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

sukanya samriddhi yojana- ssy போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளுக்காக செயல்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை (sukanya samriddhi yojana- ssy ) தொடங்கி இருப்பவர்கள் இந்த முக்கியமான அப்டேட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நேற்றைய தினம் நியூஸ்18 தமிழ் தளத்தில் வெளியான செய்தியில் போஸ்ட் ஆபீஸ் டிஜிட்டல் சேமிப்பு கணக்கை எப்படி தொடங்குவது? IPPB ஆப்பில் அதற்கான நடைமுறைகளை பற்றி விரிவாக பார்த்தோம். அந்த செய்தியை படிக்க தவறியவர்கள் இந்த லிங்கில் பார்க்கவும். இப்போது அதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் சேமிப்பு கணக்கை தொடங்கிய பின்பு அதன் வழியே, போஸ்ட் ஆபீஸில் இருக்கும் முக்கியமான சிறுசேமிப்பு திட்டமான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் எப்படி பணம் செலுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். போஸ்ட் ஆபிஸில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ரெக்கரிங் டெபாசிட் திட்டம், பிபிஎஃப், செல்வ மகள் சேமிப்பு திட்டத்துக்கு ஆன்லைன் வழியே மாத தொகை கட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. Airtel ரீசார்ஜ் செய்திருப்பவர்கள் இந்த சேவையை தெரிந்து கொள்வது நல்லது!

பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு மத்திய அரசின் செல்வ மகள் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம் என்பதால் இந்த திட்டத்தில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தில் கூடுதலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இப்போது இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் மாத தொகையை எப்படி டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

முதலில் உங்களுடைய IPPB மொபைல் பேங்கிங் செயலியைத் திறந்து, அதில் 4 இலக்க MPINஐப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

1.இப்போது 'DOP சேவைகள்' என்பதைக் கிளிக் செய்து, பின்னர் 'சுகன்யா சம்ரித்தி கணக்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.

2. இப்போது SSA கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடவும்.

3. இப்போது வைப்புத் தொகையை உள்ளிட்டு 'பணம்' என்பதைக் கிளிக் செய்யவும்.

4. இப்போது செலுத்த வேண்டிய தொகையை உறுதிசெய்து, 'உறுதிப்படுத்து' பட்டனை கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க.. Jio Balance : ரீசார்ஜ் பேலன்ஸை தெரிந்து கொள்ள இத்தனை வழிகள் இருக்கு தெரியுமா?

5. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.

6. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலும் வெற்றிகரமான செய்தியைப் பெறுவீர்கள்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: India post, Post Office, Savings, Sukanya Samriddhi Yojana