• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெண் குழந்தைகளுக்கு நகையை சேர்ப்பது போல் இந்த திட்டத்தில் பணத்தையும் சேமியுங்கள்!

பெண் குழந்தைகளுக்கு நகையை சேர்ப்பது போல் இந்த திட்டத்தில் பணத்தையும் சேமியுங்கள்!

போஸ்ட் ஆபீஸ் சேவிங்க்ஸ்

போஸ்ட் ஆபீஸ் சேவிங்க்ஸ்

அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம்.

  • Share this:
    உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்களா? அப்ப இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு தான்.

    பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு பெற்றோரும் சேமிப்பை தொடங்கினால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாகும்.பெண் குழந்தையின் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க விரும்பும் பெற்றோர்கள் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்து நன்மைகளை பெறலாம். மத்திய அரசு வழங்கும் இந்த சேமிப்பு திட்டத்தில் உள்ள மிக பெரிய வசதி என்னவென்றால்,பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம். 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1,50 லட்சம் ரூபாய் வரை இதில் சேமிக்கலாம். பொது வருங்கால வைப்பு நிதி, வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தில் கூடுதலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது.

    சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தில் கீழான சேமிப்பு ஆண்டுக்காண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண் பிள்ளைகள் எப்போதுமே ஒரு குடும்பத்தின் எதிர்காலமாகவே பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்று. பலரும் பெண் பிள்ளைகள் பிறந்தவுடனே நகை சேர்க்க தொடங்கிவிடுகின்றனர் அதே போல் இந்த திட்டத்தில் சேமிப்பை தொடங்கினால் அது அவர்களின் எதிர்கால செலவுக்கு கைக்கொடுக்கும்.

    மத்திய அரசின் ஆதரவின் கீழ் இத்திட்டம் இருப்பது இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து 10 வயது வரை அதன் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் இந்த திட்டத்தின் கீழ் அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியும். குறிப்பிட்ட பெண் குழந்தை 18 வயதை எட்டியதும் அன்று முதல் அவர் அந்த அக்கவுண்ட் ஹோல்டர் ஆகி விடுவார்.அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம். செல்வ மகள் திட்டத்தை தொடங்க வைப்புத் தொகையாளரின் அடையாளம் மற்றும் குடியிருப்பு ஆதாரம் தொடர்பான பிற ஆவணங்களுடன், பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றை தபால் அலுவலகம் அல்லது வங்கியில் கணக்கு திறக்கும் நேரத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    .கணக்கைத் திறக்க, நீங்கள் வைப்புத் தொகையையும் செலுத்த வேண்டும். நீங்கள் ரூ .250 முதல் 1.50 லட்சம் வரை எந்த தொகையையும் செலுத்தலாம்.அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம்.

    PF பணம் எடுப்பது முதல் அக்கவுண்ட் மூடுவது வரை.... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

    இந்த சேமிப்புத் திட்டத்தை 14 ஆண்டுகள் வரை மட்டுமே தொடர முடியும். எனவே ஓராண்டிற்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 14 ஆண்டுகள் முடிவில் ரூ.14 லட்சம் ஆகிறது. 21 ஆண்டுகளுக்குப் பின், வட்டி சேர்க்கப்பட்டு ரூ.46 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது. இதேபோல் ஆண்டிற்கு ரூ.50,000 என 14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், இறுதியாக ரூ.23 லட்சமாக உங்கள் மகளின் பெயரில் இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: