ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஏழை எளிய மக்களும் பெரிய சேமிப்பை இங்கு செய்யலாம்.. போஸ்ட் ஆபீஸில் கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

ஏழை எளிய மக்களும் பெரிய சேமிப்பை இங்கு செய்யலாம்.. போஸ்ட் ஆபீஸில் கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

post office savings : போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லை நாமினேஷன் தேர்வு, மாத தொகை அனைத்தும் வாடிக்கையாளர்கள் விருப்பம் போல் தேர்வு செய்யவும் வசதி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

போஸ்ட் ஆபீஸில் (post office ) இருக்கும் சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் அதற்கு வழங்கப்படும் வட்டி, மினிமம் சேமிப்பு தொகை விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லை நாமினேஷன் தேர்வு, மாத தொகை அனைத்தும் வாடிக்கையாளர்கள் விருப்பம் போல் தேர்வு செய்யவும் வசதி உள்ளது.

டைம் டெபாசிட் திட்டத்துக்கு வழங்கப்படும் வட்டி - 5.5% ஆகும். இதில் குறைந்தது ரூ. 1000 முதல் சேமிப்பை தொடங்கலாம். இதன்

இரட்டிப்பு காலம் 10.75 வருடம் ஆகும்.

அடுத்தது, ரெக்கரிங் ரெபாசிட். இதில் வழங்கப்படும் வட்டி - 5.8%. இதில் குறைந்தது ரூ. 100 முதல் சேமிப்பை தொடங்கலாம்

இரட்டிப்பு காலம் 12.41 வருடம் ஆகும். போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டத்தில் வட்டி 6.6% வழங்க்ப்படுகிறது. இதில் குறைந்தது ரூ. 1000 முதல் சேமிப்பை தொடங்கலாம் .இரட்டிப்பு காலம் 10.91 வருடம் ஆகும்.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் வட்டி - 7.1% ஆகும். இதில் குறைந்தது ரூ. 500 முதல் சேமிப்பை தொடங்கலாம் . இரட்டிப்பு காலம் - 10.14 வருடம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி 7.4%இரட்டிப்பு காலம் 9.73 வருடம் ஆகும். இதில் குறைந்தது ரூ. 1000 முதல் சேமிப்பை தொடங்கலாம்

இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் தொடங்குவது ஏன் முக்கியம் தெரியுமா?

அடுத்தது, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். பெண் குழந்தைகளுக்கு இந்த சேமிப்பு திட்டத்தில் வழங்கபப்டும் வட்டி - 7.6% ஆகும். இரட்டிப்பு காலம் - 9.47 வருடம். இதில் குறைந்தது ரூ. 250 முதல் சேமிப்பை தொடங்கலாம் . தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் வட்டி 6.8% வழங்கப்படுகிறது. இதில் குறைந்தது ரூ. 1000 முதல் சேமிப்பை தொடங்கலாம் இரட்டிப்பு காலம் 10.59 வருடம் ஆகும்.

இதையும் படிங்க.. தொழில் தொடங்க அரசு தரும் 10 லட்சம் கடன்.. எப்படி விண்ணபிப்பது? முழு விபரம்!

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் இதில் குறைந்தது ரூ. 1000 முதல் சேமிப்பை தொடங்கலாம் . வழங்கப்படும் வட்டி - 6.9%

இரட்டிப்பு காலம் 124 மாதங்கள் ஆகும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Money, Post Office, Savings