ஹோம் /நியூஸ் /வணிகம் /

அஞ்சல் நிலையத்தில் சூப்பர் சேமிப்புத் திட்டம் - 5 வருடத்தில் ரூ.14 லட்சம் பெறலாம்

அஞ்சல் நிலையத்தில் சூப்பர் சேமிப்புத் திட்டம் - 5 வருடத்தில் ரூ.14 லட்சம் பெறலாம்

அஞ்சல் நிலைய சேமிப்புத் திட்டம்

அஞ்சல் நிலைய சேமிப்புத் திட்டம்

Post office scheme | நாம் செய்யக் கூடிய முதலீட்டிற்கு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் தரக் கூடிய வருமானம் என்பதே பொதுமக்களின் தேர்வாக இருக்கிறது. அந்த வகையில் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் உங்களுக்கு பலனுள்ளதாக அமையும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலீடு என்பது நீண்ட கால சேமிப்பை பலனுள்ளதாக மாற்றக் கூடியதாகும். வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணத்தை சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து அந்தப் பணத்தை பெருக்க வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பமாக இருக்கும். பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யும்போது அதிக லாபம் கிடைக்கும் என்றாலும், சில சமயம் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

அதுவே சிட் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்தீர்கள் என்றால், முதலுக்கே மோசம் வரக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆக, நாம் செய்யக் கூடிய முதலீட்டிற்கு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் தரக் கூடிய வருமானம் என்பதே பொதுமக்களின் தேர்வாக இருக்கிறது. அந்த வகையில் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் உங்களுக்கு பலனுள்ளதாக அமையும்.

வழக்கமாக நீங்கள் தேர்வு செய்யக் கூடிய பிக்சட் டெபாசிட் திட்டங்களைக் காட்டிலும் கூடுதல் வட்டி தரக் கூடியதாக தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டங்கள் அமைகின்றன. தேசிய சேமிப்புத் திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். திட்டத்தின் முதிர்வு காலத்தில், உங்கள் முதலீடுகளுக்கு ஏற்ப பெரும் தொகை உங்களுக்கு கிடைக்கும்.

அனைத்து அஞ்சல் நிலையத்திலும் சேரலாம்

தேசிய சேமிப்புத் திட்டம் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் கிடைக்கப் பெறுகிறது. இதில் வட்டி விகிதம் 6.8 சதவீதம் ஆகும். இதனுடன் வருடாந்திர கூட்டு வட்டியும் உங்களுக்கு கிடைக்கும். அதே சமயம், திட்டத்தின் முதிர்வு காலத்திற்குப் பிறகுதான் உங்கள் பணத்தை நீங்கள் பெற முடியும்.

உதாரணத்திற்கு, இன்றைய தினம் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 5 ஆண்டு முதிர்வு கால முடிவில் உங்களுக்கு ரூ.14 லட்சம் கிடைக்கும்.

Also Read : வட்டி மட்டுமே ரூ.36,000 கிடைக்கும்.. காலத்துக்கும் நின்னு பேசும் எல்.ஐ.சியின் ஜீவன் உமாங் பாலிசி!

அதேபோன்று நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 5 ஆண்டுகால இறுதியில் உங்களுக்கு ரூ.6.94 லட்சம் கிடைக்கும். அதாவது நீங்கள் இன்று முதலீடு செய்கின்ற பணம் 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு பணமாக உங்களுக்கு திரும்பக் கிடைக்கிறது. நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு எந்த வகையிலும் ஆபத்தில்லை என்பது இதில் கூடுதல் சிறப்பம்சமாக இருக்கிறது.

திட்டத்தின் வரையறைகள்

18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும், அஞ்சல் நிலையத்தின் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் இணையலாம். ஒருவேளை பயனாளர் மைனராக இருக்கும் பட்சத்தில் அவரது பெற்றோர் அல்லது வாரிசு தாரர் பெயரில் சான்றிதழ் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் சேருவதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,000 ஆகும். அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். உங்கள் முதலீட்டு மதிப்பு 100இல் பெருக்கக் கூடியதாக அமைய வேண்டும்.

Also Read : வட்டியை உயர்த்திய டாப் வங்கிகள்! டெபாசிட் செய்ய இதுதான் சரியான டைம்

திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு முன்னதாக உங்கள் பணத்தை நீங்கள் திரும்பப் பெற முடியாது. அதே சமயம், அவசர சூழ்நிலை கருதி பணத்தை திரும்பப் பெற நினைப்பவர்களுக்காக சில விதி விலக்குகள் உண்டு.

Published by:Selvi M
First published:

Tags: Post Office, Savings, Tamil News