இந்தியாவில் உள்ள பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் நல்ல சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதை வருங்கால வாழ்வாதாரத்திற்காக ஒரு மிக முக்கியமான விஷயம் என்று நினைக்கிறார்கள்; அதை செயல்படுத்தியும் வருகிறார்கள்.
மேலும் அவர்கள் அதிக வட்டி விகிதம் மற்றும் உத்தரவாதம் மிக்க வருமானத்தை வழங்கும் பாலிசியில் முதலீடு செய்யவே விரும்புகிறார்கள். வங்கிகளில் பிக்ஸடு டெப்பாசிட் தொகைகள் குறிப்பிட்டத் தேவையைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், வட்டி விகிதம் மற்றும் வரிச் சலுகைகள் போன்ற நன்மைகள் தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களைப் போல அதிகமாக இருப்பதில்லை.
நினைவூட்டும் வண்ணம், போஸ்ட் ஆபிஸ் திட்டங்களின் மீது வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80சி இன் கீழ் வரிச் சலுகைகள் அணுக கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்கள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து 5.5 % முதல் 7.6 % வரையிலான வட்டி விகிதங்களுடன் வருகிறது. மறுகையில் உள்ள பிக்ஸடு டெப்பாசிட்களுக்கு பொதுவாக 5 முதல் 6 % வட்டி விகிதமே கிடைக்கும், அதுவும் 1 முதல் 10 ஆண்டுகள் வரைக்குள்!
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் .. போஸ்ட் ஆபீஸ் பேங்கில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?
தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்கள் ஆனது பிக்ஸடு டெப்பாசிட்களை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன, மேலும் நீங்கள் எந்த விதமான ஆபத்துகளும் இல்லாத பாலிசிஸிகளில் முதலீடு செய்ய விரும்பினால், போஸ்ட் ஆபீஸ்கள் தான் உங்களின் முதல் மற்றும் பிரதான தேர்வாக இருக்க வேண்டும்.
பப்ளிக் ப்ரோவிடென்ட் ஃபண்ட் (Public Provident Fund)
பிபிஎஃப் அக்கவுண்ட் என்பது 15 வருட பாலிசி ஆகும், இது 7.1 5 என்கிற அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது மற்றும் வருமான வரி சலுகைகளுடன் வருகிறது, அதாவது இதன் கீழ் சம்பாதித்த வட்டிக்கு வரி இல்லை. இதன் கீழ் சிறுவர்கள் பெயரின் கீழும் அக்கவுண்ட் திறக்கலாம். மேலும் ஆண்டுக்கு ரூ. 500 முதல் ரூ.1.5 லட்சம் வரையில் டெப்பாசிட் செய்யலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana)
இது பெண் குழந்தைகளுக்கான ஒரு சேமிப்பு திட்டமாகும். இது 7.6 % வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதன் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக அக்கவுண்ட் திறக்கலாம், மேலும் இத்திட்டத்தின் காலம் 21 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடு மற்றும் பெறப்படும் வட்டிக்கும் கூட வரி விலக்கு கிடைக்கும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்... வீட்டில் பெண் குழந்தை இருக்கா? அப்ப இந்த திட்டங்கள் குறித்து கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம் (Senior Citizens Savings Scheme)
ஓய்வுக்குப் பிறகு மூத்த குடிமக்கள் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கு இதுவொரு சிறந்த திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி விகிதம் 7.4 % ஆகும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும், விரும்பினால் மேலும் நீட்டிக்கலாம். இந்த அக்கவுண்ட்டிற்கான அதிகபட்சத் தொகை ரூ.15 லட்சம் ஆகும், இதற்கும் முழு வரி விலக்கு உண்டு. இந்த திட்டம் சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கானதாகும்..
நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட்ஸ் (National Savings Certificates)
ஐந்தாண்டுகளுக்குள், குறுகிய காலத்தில் முதலீடு செய்து வரிச் சலுகைகளைப் பெற விரும்புவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஐந்தாண்டுக்கான வங்கிகளின் பிக்ஸடு டெப்பாசிட் ஆனது பொதுவாக 5.5 %வட்டி விகிதத்தில் வரும் போது, இது 6.8 % வழங்குகிறது. இந்த அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்திற்கு மொத்தத் தொகை மட்டுமே தேவைப்படுகிறது, அதாவது மாதந்தோறும் பணம் டெப்பாசிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Post Office, Savings