முகப்பு /செய்தி /வணிகம் / 5 ஆண்டுகளில் ரூ. 20 லட்சம்.. வட்டி மட்டுமே 6.8% கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் இதுதான்!

5 ஆண்டுகளில் ரூ. 20 லட்சம்.. வட்டி மட்டுமே 6.8% கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் இதுதான்!

முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு ரூபாய் 1.5 லட்சம் முதலீடுகளுக்கு வரி விலக்கு பெறுகிறார்கள்.

முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு ரூபாய் 1.5 லட்சம் முதலீடுகளுக்கு வரி விலக்கு பெறுகிறார்கள்.

முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு ரூபாய் 1.5 லட்சம் முதலீடுகளுக்கு வரி விலக்கு பெறுகிறார்கள்.

  • Last Updated :

    போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் இருக்கும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் பற்றியும் அதில் முதலீடு செய்வது குறித்தும் உங்களுக்கு தெரியுமா?

    இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும், பணத்தை சேமித்து நல்ல லாபம் நீட்ட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முதலில் செய்ய வேண்டியது இதுதான். நீங்கள் ரூ 100, ரூ 500, ரூ 1000, ரூ 5000 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள என்எஸ்சி சான்றிதழ்களை வாங்க வேண்டும். பல சான்றிதழ்களை வெவ்வேறு விலையில் வாங்குவதன் மூலம் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய முடியும். தற்போது இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி 6.8% ஆகும். இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டி வருடத்திற்கு ஒருமுறை உங்களின் கணக்கில் செலுத்தப்பட்டு விடும். மொத்தமாக மெச்சூரிட்டியின் போது உங்கள் கைக்கு பணம் கிடைத்துவிடும்.

    இந்த திட்டத்திற்கான மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகளாக நிர்ணியிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவை என்றால்  கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டித்துக் கொள்ளமுடியும். அதற்கான வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது. மிகவும் குறைந்த அளவில் கூட நீங்கள் இந்த கணக்கை துவங்க முடியும். அதாவது ரூ. 100 முதல் கூட முதலீடு தொடங்குகிறது. அதை செலுத்தி கூட சேமிப்பை தொடங்கலாம்.இந்த திட்டத்தில் உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை. அதே போல் இந்த திட்டத்தில் வரிவிலக்கும் வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு ரூபாய் 1.5 லட்சம் முதலீடுகளுக்கு வரி விலக்கு பெறுகிறார்கள்.

    எனவே ஒரு நல்ல முதலீடு திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அல்லது இளம் வயதிலே நல்ல சேமிப்பை தொடங்கி விட வேண்டும், ஓய்வு காலத்தில் நல்ல வருவாய் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தைரியமாக முன் வந்து இந்த தேசிய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போது இந்த திட்டத்தில் 6.8% வட்டி வழங்கப்படுகிறது. அப்படியென்றால் நீங்கள் ரூ. 15 லட்சம் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள் 5 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ. 20.85 லட்சம் கையில் கிடைக்கும்.

    top videos

      உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

      First published: