Home /News /business /

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்... வந்திருக்கும் புதிய மாற்றங்கள்!

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்... வந்திருக்கும் புதிய மாற்றங்கள்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

Post Office savings rules : பணம் அனுப்பும்போதும், பெறும்போதும் மொபைல் நம்பரை சரிபார்க்க வேண்டும்.

    இந்திய தபால் துறை திட்டங்களான போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. சிறு சேமிப்பு திட்டங்கள் தொடங்கி பிக்சட் டெபாசிட், தொடர் வைப்பு நிதி போன்ற கணக்குகளில் லாபத்துடன் சேர்த்து பணத்திற்கு பாதுகாப்பும் கிடைப்பதால இந்த வகையான சேமிப்பில் பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நீண்ட கால முதலீடுகளுக்கு போஸ்ட் ஆபீஸ் சிறந்த இடமாக விளங்குகிறது. இந்நிலையில் இதில் சேமிப்பு கணக்கு மற்றும் எந்தவிதமான கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய அஞ்சல் துறை முக்கியமான சில அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அதுக் குறித்து பார்ப்போம்.

    அதாவது, போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவரும் இந்த புதிய மாற்றங்கள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மோசடியை தடுக்கவும் இந்த புதிய விதிமுறைகள் உதவும் என்பதால் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் பாதுகாப்பு கருதி இதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. அவை என்னென்ன விரிவாக பார்க்கலாம்.

    1. முதலில் போஸ்ட் ஆபீஸில் சாதாரண சேமிப்பு கணக்கு தொடங்கி எந்த விதமான முதலீடு கணக்கை வைத்திருந்தாலும் சரி அவர்கள்
    பான் எண், மொபைல் நம்பரை அந்த கணக்குடன் இணைக்க வேண்டும்.

    இதையும் படிங்க.. Google : ஏர்டெல் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கூகுள்.. பின்னால் இருக்கும் மிகப் பெரிய காரணம்!

    2. அதே போல் ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் அனைத்து திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் அக்கவுண்ட்-ஐ முடித்துக் கொள்ளும்போது கணக்கு புத்தகத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தொடர்புடைய அக்கவுண்ட்டில் கடைசியாக வரவு வைக்கப்பட்ட பரிவர்த்தனை குறித்த விவரம் குறிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அஞ்சல் நிலையங்களில் இருக்கும் எந்தவொரு அக்கவுண்ட் என்றாலும், அது நிறைவுபெறும் சமயத்தில் அல்லது முன்கூட்டியே முடித்துக் கொள்ளும் சமயத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு புத்தகத்தை கட்டாயம் ஒப்படைக்க வேண்டும் என்று விதியில் தான் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    4. மேலும் ரூ.20,000க்கு மேல் பணம் அனுப்பும்போதும், பெறும்போதும் மொபைல் நம்பரை சரிபார்க்க வேண்டும்.

    5. அதேசமயம் பான் கார்டு இல்லாத வாடிக்கையாளர்களிடம் படிவம் 60/61 வாங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க.. boi : குவிந்த புகார்கள்.. வாடிக்கையாளர்களுக்கு பேங்க் ஆப் இந்தியா வங்கி சொன்ன குட் நியூஸ்!

    6. தபால் நிலைய கணக்கு தொடங்கியவர்களிடம் அனைத்து கேஒய்சி ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும்.

    இதுக் குறித்த கூடுத விவரங்களுக்கு 1800 266 6868 என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்கள் விளக்கங்களை பெறலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Post Office, Savings

    அடுத்த செய்தி