போஸ்ட் ஆபீஸில் இருக்கும் RD கணக்கு மிகவும் பிரபலமான முதலீட்டு திட்டமாகும். ரெக்கரிங் டெப்பாசிட் ம என அழைக்கப்படும் இந்த திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிலையான வருமானத்தை அளிக்க கூடியவை. இதுப்போன்ற முதலீட்டுத் திட்டங்களில் நீங்கள் மாதாந்திர தவணை முறையில் தொகையை சேமித்து வந்தால் வட்டியுடன் முதிர்வுத் தொகையைப் பெற முடியும். வயது, தேர்வு செய்யப்பட்ட கணக்கின் வகை மற்றும் முதிர்வு காலத்தைப் பொறுத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸில் RD கணக்குகளுக்கு வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்ற்ன.
போஸ்ட் ஆபீஸில் இருக்கும் RD கணக்குகளின் குறைந்த பட்ச கால அளவு 5 ஆண்டுகள். முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகைக்கு எந்த வரம்பும் இல்லை. முதலீட்டாளர்களுக்கு 5.8% வருடாந்திர விகிதத்தில் வட்டி வழங்குகிறது.5 ஆண்டுகளுக்குப் பிறகு RD கணக்கை தொடர விரும்பும் நபர்கள் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்து கொள்ளலாம். இந்த கணக்கின் அதிகபட்ச காலம் 10 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீட்டிக்கப்பட்ட RD கணக்குகளுக்கு காலாண்டு அடிப்படையில்ட வட்டி தொடர்ந்து கிடைக்கும்.சரி இப்போது இந்த RD கணக்கில் வாடிக்கையாளர்கள் மறந்து கூட செய்யாகூடாத தவறை பற்றி பார்க்கலாம்.
இதையும் படிங்க.. எஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பை தொடங்கியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.. ஏன் தெரியுமா?
அதாவது கணக்கில் அக்கவுண்டை தொடங்கி சேமிப்பை ஆரம்பித்த பின்னர், தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில், இந்த கணக்கில் மாதாந்திர தவணைத் தொகையை டெபாசிட் செய்ய முடியாமல் போனால், சம்பந்தப்பட்ட
வங்கி அல்லது போஸ் ஆபீஸ் அலுவலகம் உங்களிடமிருந்து அபராதத்தை வசூலிக்கலாம். ஒவ்வொரு 100 ரூபாய்க்கு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. RD கணக்கை மீண்டும் திறக்கும்போது தவறவிட்ட சேமிப்புத் தொகையுடன் தொடர்புடைய கணக்கு வைத்திருப்பவர் இந்த அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், கணக்கு வைத்திருப்பவர் RD கணக்கை மீண்டும் திறக்க விரும்பவில்லை என்றால், தபால் நிலையம் முன்கூட்டியே திரும்பப் பெறும் விதியை செயல்படுத்துகிறது மற்றும் அதற்கேற்ப வட்டி வசூலிக்கிறது.
இதையும் படிங்க.. SBI locker : வாடிக்கையாளர்களிடம் எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும் தெரியுமா?
4 மாதங்களுக்கும் மேலாகத் தொகை செலுத்தப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட கணக்கு வைத்திருப்பவரை, தவணை செலுத்தாதவராக அறிவித்து கணக்கு மூடப்படும். இதுபோன்ற காரணங்களால் கணக்கு மூடப்பட்டால், அடுத்த மாதத்திற்கு (ஐந்தாவது மாதம்) மீதமுள்ள தொகையை செலுத்திய 2 மாதங்களுக்குள் கணக்கை மீண்டும் திறக்க முடியும். இது உங்களுக்கு தேவையில்லாத நஷ்டம் தான்.
அதனால் எப்போதுமே நீங்கள்
RD கணக்கைத் திறக்கும் போது முதல் தவணைத்தொகையைச் செலுத்த வேண்டும். மேலும் அந்தத் தேதியின் அடிப்படையில் மாதாந்திர டெபாசிட்களை நிலுவைத் தேதிக்கு முன்பாகச் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாதத்தின் 1 முதல் 15ம் தேதிக்குள் கணக்கைத் திறக்கும் முதலீட்டாளர்கள், அடுத்த மாதம் 15ம் தேதிக்கு முன் மாதாந்திர டெபாசிட் செய்ய வேண்டும். 15ம் தேதிக்குப் பிறகு தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு, 16ம் தேதிக்கு மேல் மாதத்தின் கடைசி நாளுக்கும் முன், டெபாசிட் செய்யப்பட வேண்டும்.சேமிப்பில் எப்போதுமே இதுப்போன்ற தவறுகளை செய்யாமல் தவிர்த்தால் மட்டுமே முழு லாபமும் உங்களை சேரும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.