• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • அடேங்கப்பா! 10 வருடத்தில் 16 லட்சம் ரிட்டன் கிடைக்குமாம்.. அசத்தும் போஸ்ட் ஆபீஸ் சேவிங்க்ஸ்!

அடேங்கப்பா! 10 வருடத்தில் 16 லட்சம் ரிட்டன் கிடைக்குமாம்.. அசத்தும் போஸ்ட் ஆபீஸ் சேவிங்க்ஸ்!

சேமிப்பு

சேமிப்பு

ஒரு வருடத்திற்கு பிறகு நிலுவையில் 50% இடையில் பணம் எடுக்க முடியும்.

  • Share this:
    போஸ்ட் ஆபீஸி சேவிங்க்ஸில் இன்று பார்க்க போவது 10 வருடத்தில் 16 லட்சம் ரிட்டன் கிடைக்கும் சூப்பர் சேமிப்பு திட்டம் பற்றி தான்.

    தபால் அலுவலகத்தில் இருக்கும் சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் மிகவும் முக்கியமானது தொடர் வைப்பு நிதி திட்டம் இந்த திட்டத்தில் சேமிப்பது எண்ணற்ற லாபத்தை தரகூடியது. அதிலும் குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்கள் இதில் முதலீட்டைத் தேர்ந்தெடுப்பது வருங்காலத்தில் கைக்கொடுக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக எவ்வலவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். உங்கள் விருப்பம் தான். இதில் முதலீடு செய்ய வேண்டும் என முடிவு எடுத்த உடன் நீங்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் போஸ்ட் ஆஃபீஸ் சென்றால் போதும். தொடர் வைப்பு நிதி கணக்கினை தொடங்க வேண்டும்.

    பின்பு தேவைகேற்ப முதலீடை தொடங்கலாம். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்கள் உள்ளன. முடிந்தவுடன் அதை நீடித்துக் கொள்ளலாம். வட்டி விகிதம் ,  வங்கிகளை விட அதிகம் 5.8% வரை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வைப்பு தொகையை முன் கூட்டியே செலுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு சலுகையும் உண்டு. அதாவது 12 மாதங்களுக்கான தொகையினை முன் கூட்டியே செலுத்தினால், ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 4 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். 12 டொபாசிட்டுகளுக்கு பிறகு டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு நிலுவையில் 50% இடையில் பணம் எடுக்க முடியும்.

    இந்த கடனை ஒரே தவணையாகவும் அல்லது மாத தவணையாகவும் கூட செலுத்திக் கொள்ளலாம். கடனை உங்களது திட்டம் முதிர்வு அடையும் வரை செலுத்தவில்லை எனில், உங்களது கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இந்த கடனை நீங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சல் அலுவகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.மாதம் 10,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் எனில் வட்டி விகிதம் 5.8% என்றால் உங்களது முதிர்வு தொகை 10 வருடங்களுக்கு பிறகு, சுமார் 16 லட்சம் ரூபாய் ஆகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: