போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருந்த பலரும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கி சேமிப்பு கணக்குகள் இடையே பணப் பரிவர்த்தனை செய்யும் சேவை கூடிய விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘எந்த நேரமும், எங்கிருந்தும் அஞ்சல் சேமிப்புகள்’ குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த வசதி மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால், அஞ்சலக சேமிப்பு கணக்கில் இருந்து எந்த ஒரு வங்கிக் கணக்குக்கும், வங்கியில் இருந்து அஞ்சலக சேமிப்பு கணக்குக்கும் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இதன்மூலம் கிராமப்புற விவசாயிகள்,
மூத்த குடிமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க.. PM-Kisan: வருஷத்துக்கு ரூ. 6000 கிடைக்கனும்னா இதை கட்டாயம் செய்யனும்!
முதலீடு திட்டங்களில் சேமிப்பதில் அஞ்சல் சேமிப்பு ஒரு நல்ல தேர்வாக பார்க்கப்படுகிறது. பணத்திற்கு பாதுகாப்பு, நல்ல வட்டி, கூடவே வரிச்சலுகை என வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் ஏகப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீடு திட்டங்கள் அஞ்சலகத்தில் உள்ளது. அதே போல் பெண் - ஆண் குழந்தைகளுக்காக அஞ்சலகத்தில் செயல்படும் திட்டங்கள் மக்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இதனால் இளம் தலைமுறையினர் தொடங்கி பலரும் அஞ்சல் சேமிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களை தவிர்த்து மூத்த குடிமக்களும் அஞ்சல் சேமிப்பை அதிகம் கையாளுகின்றனர். இதன் வாடிக்கையாளர்கள் பலகாலமாக எதிர்பார்த்த விஷயம்,
வங்கியில் இருந்து அஞ்சலக சேமிப்பு கணக்குக்கும் பணப் பரிமாற்றம் , அதே போல் அஞ்சல் சேமிப்பில் இருந்து பேங்க் அக்கவுண்டுக்கு பணப்பரிமாற்றம் செய்ய விரும்பும் வசதி.
இதையும் படிங்க.. LIC திட்டத்தில் வந்துள்ள முக்கியமான மாற்றம் என்ன? முதலீட்டாளர்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!
இது குறித்து மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது, ‘எந்த நேரமும், எங்கிருந்தும் அஞ்சல் சேமிப்புகள்’ என்ற அறிவிப்பில் நாட்டில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களையும், மொத்த வங்கி சேவை வழிமுறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை ஈஸியாக செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் பணி அதி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் இது நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அஞ்சலக மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளோடு இணையவழி பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.