இந்திய அஞ்சல் சேவை சார்பில் தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டம் (MIS) செயல்படுத்தப்பட்டு வருகிறது. தங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ளவும், எந்த வித ரிஸ்க்கும் இல்லாமல் லாபம் அடையவும் நினைக்கின்ற இந்தியர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.
ஆபத்துகள் நிறைந்த முதலீட்டுத் திட்டங்களில் சேருவதைக் காட்டிலும், பாதுகாப்பு கொண்ட அரசு திட்டத்தில் முதலீடு செய்வதையே மக்கள் விரும்புகின்றனர்.
அஞ்சல் நிலையத்தின் எம்ஐஎஸ் அக்கவுண்டில் முதலீடு செய்வதன் மூலமாக ஒருவர் மாதந்தோறும் ரூ.5,000 வரை பணப்பலன் பெற முடியும்.
இதையும் படிங்க.. pre approved loan : இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்!
டெபாசிட் செய்வதற்கான வரையறை :
எம்ஐஎஸ் சேமிப்புத் திட்டத்தின் கீழ் நீங்கள் தனிநபர் அக்கவுண்ட் அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட் திறந்து கொள்ளலாம். தனிநபர் அக்கவுண்ட் கீழ் நீங்கள் ரூ.4.5 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் அக்கவுண்ட் வாயிலாக ரூ.9 லட்சம் வரையிலும் நீங்கள் முதலீடு செய்ய முடியும். அதே சமயம், தனிநபர்கள் இருவர் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறந்து தலா ரூ.4.5 லட்சம் என்ற பங்கு அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
இதையும் படிங்க.. வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது.. பிரபல வங்கி அறிவிப்பு!
மாதந்தோறும் ரூ.5,000 பெறுவது எப்படி?
இந்திய அஞ்சல் சேவை சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி வெளியிடப்பட்ட டிவிட்டர் பதிவில், இந்திய குடிமக்கள் எம்ஐஎஸ் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த முதலீட்டிற்கு ஆண்டுதோறும் 6.6 சதவீத வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜாயிண்ட் அக்கவுண்ட் திட்டத்தின் கீழ் அஞ்சல் நிலையத்தில் நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், 6.6 சதவீத வருடாந்திர வட்டி அடிப்படையில் உங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.59,400 வருமானம் கிடைக்கும். இந்த தொகையை 12-ஆக வகுத்தால், மாதந்தோறும் உங்களுக்கு கிடைக்க கூடிய வருமானம் ரூ.4,950 ஆகும். ஆனால், இந்த வட்டி ஜாயிண்ட் அக்கவுண்டில் மட்டுமே சாத்தியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தனிநபர் அக்கவுண்டை பொருத்தவரையில் மாதந்தோறும் ரூ.2,475 என்ற வகையில் வருமானம் கிடைக்கும்.
எம்ஐஎஸ் அக்கவுண்ட் திறப்பது எப்படி?
அஞ்சல் நிலையத்தில் நீங்கள்
எம்ஐஎஸ் அக்கவுண்ட் திறக்க வேண்டும் என்றால், அதற்கு முன்னதாக உங்கள் பெயரில் சேமிப்பு அக்கவுண்ட் இருக்க வேண்டும். இத்துடன் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள ஃபோட்டோ, முகவரி சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்யலாம். அதற்கு மேற்பட்டு 1,000 பெருக்கலில் ரூ.4.5 லட்சம் வரை தனிநபர் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கூட இந்த அக்கவுண்ட் திறக்கப்படுகிறது. ஆனால், 18 வயது நிரம்பிய பிறகே அவர்கள் பணப்பலன்களை பெற முடியும்,.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.