வங்கியை விட வட்டி அதிகம்.. உங்கள் சேமிப்பை இங்கு தொடங்குங்கள்!

சிறந்த சேமிப்பு

அடையாள ஆவணம், முகவரி ஆவணம், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இவையே போதுமானது.

  • Share this:
    வங்கியை விட நல்ல வட்டி வழங்கும் போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்பு திட்டமான மாதாந்திர வருமானம் தரும் சேமிப்பு திட்டத்தில்(MIS) எப்படி முதலீடு செய்வது என்ற விவரம் இதோ.

    எப்போதுமே சேமிப்பு என்பது வெறும் முதலீடாக மட்டும் இருக்க கூடாது. ஒரு நல்ல சேமிப்பில் வாழ்நாள் பயனும் கண்டிப்பாக இருக்க வேண்டும். தற்சமயம் நல்ல வட்டி கிடைப்பதற்காக பணத்தை போட்டுவிட்டு முதிர்வு காலத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது முதலீட்டாளர்களுக்கு தான் சிக்கலை தரும். எனவே, எப்போதுமே ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ஒரு சேமிப்பு திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அலசி ஆராய்வது நல்லது. அந்த வகையில் உங்கள் தேடலை எளிமையாக்க மாதாந்திர வருமானம் தரும் சேமிப்பு திட்டம் குறித்த விவரங்களை உங்களுக்கு பகிர்கிறோம்.

    அஞ்சல் அலுவலகத்தில் செயல்பாட்டில் இருக்கும் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமென்றால் முதலில் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கை தொடங்கியிருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் வரை நிர்ணியிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக 5 ஆண்டுகள் நிறைவடையும் போது உங்கள் சேமிப்பில் நீங்கள் இரட்டிப்பு லாபத்தை பார்ப்பீர்கள். இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% வழங்கப்படுகிறது. முதிர்வுகாலம் முடிந்த பின்னரும் நீங்கள் சேமிப்பை தொடர நினைத்தால் திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். நீங்கள் தனியாகவோ அல்லது ஜாயிண் அக்கவுண்ட் மூலமாகவோ சேமிக்கலாம்.

    ஜாயிண்ட் அக்கவுண்ட் என்றால் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் சேர வேண்டுமெனில் உங்களிடம் இருக்க வேண்டிய ஆவணங்கள் அடையாள ஆவணம், முகவரி ஆவணம், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இவையே போதுமானது. இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனிலே பெற்றுக்கொள்ளலாம் அல்லது தபால் அலுவலகத்தில் விண்ணப் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கு வட்டி எப்படி வழங்கப்படும் என்றால், மாதாந்திர வருவாய் திட்டத்தினை தொடங்கிய தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். அதேபோல அந்த முதலீட்டு தொகை முதிர்ச்சி அடையும் வரை இந்த வட்டி தொகை வழங்கப்படும். இடையில் பணம் தேவை என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் வங்கியை விட இந்த சேமிப்பு திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தரும் ஒன்றாகும். பணத்திற்கு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: