• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • செலவை குறைக்க போஸ்ட் ஆபீஸ் தரும் வாய்ப்பு.. ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்!

செலவை குறைக்க போஸ்ட் ஆபீஸ் தரும் வாய்ப்பு.. ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்!

சேமிப்பை தொடங்கி விட்டால் மாதம் மாதம் வீண் செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பில் பணத்தை சேர்க்கலாம்

  • Share this:
    செலவை குறைக்க போஸ்ட் ஆபீஸ் தரும் வாய்ப்பு என்னவா இருக்கும்ன்னு யோசிக்கிறீங்களா? வேற என்ன சேமிப்பு தான். மிகக் குறைந்த அளவே முதலீடு செய்யக்கூடிய திட்டங்களில் நீங்கள் சேமிப்பை தொடங்கி விட்டால் மாதம் மாதம் வீண் செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பில் பணத்தை சேர்க்கலாம்.

    மிடில் கிளாஸ் மக்களை எடுத்துக்கொண்டால் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் எங்கு? எப்படி? எது லாபம்? யாரை கேட்கலாம்? இதுப்போன்ற சந்தேகங்களால் சேமிப்பை ஹோல்டில் போட்டு விடுவார்கள். சேமிக்க வேண்டும் என நினைக்கும் பணமும் வீண் செலவுகளால், ஆடம்பர செலவுகளால் பறிபோகும். . இனியும் தாமதம் வேண்டாம். வங்கியை விட அதிக வட்டி, லாபம் தரும் அஞ்சலக சேமிப்பைத் தேர்ந்தெடுங்கள். கை நிறைய லாபம் பார்ப்பீர்கள் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ், வங்கியைக் காட்டிலும் நல்ல வட்டியைத் தருகிறது. மிடில் கிளாஸ் மக்கள் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸில் இருக்கும் அருமையான திட்டங்களை யூஸ் பண்ணிக்கோங்க.

    தற்போதைய பரபரப்பான உலகில் மக்களிடையே சேமிப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. ஆடம்பர செலவுகள் அதிகமான இந்த காலக்கட்டத்தில் லோன்கள், இஎம்ஐ-கள் தான் அதிகமே தவிர. சேமிப்பு மிகக்குறைவு. திடீர் செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் வீண் செலவு என்பதை கையில் இருக்கும் பணத்தில் தேவையில்லாமல் தண்ட செலவு செய்து நாளை கழிப்பது. இனிமேல் அதற்கு வாய்ப்பு தராதீர்கள். எதாவது ஒரு சேமிப்பில் பணத்தை போட்டு விடுங்கள் உங்களுக்கே தெரியாமல் அந்த பயன் வருங்காலத்தில் உங்களை காக்கும். அவசர காலத்திலும் கைக்கொடுக்கும். அதிகமான தொகை கூட இல்லை மிக மிக குறைந்த முதலீட்டில் எப்படி போஸ்ட் ஆபீஸில் சேமிக்கலாம் என்று பாருங்கள்.

    தேசிய சேமிப்புப் பத்திரம்: 5 வருடம் முதல் 10 வருடம் சேமிப்புக்காலம். அதில் 8 சதவீத லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்த முதலீட்டுத் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் பெற முடியும்.

    அஞ்சல் சேமிப்பில் எதற்கெல்லாம் நீங்கள் அபராதம் கட்ட வேண்டும் தெரியுமா?

    மாதாந்திர வருவாய் திட்டம்: இதில் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இது 5 வருடத்திற்குப் பிறகு 7.3 சதவீத லாபத்துடன் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் திரும்பப் பெற முடியும். இதுவே ஜாயிண்ட் கணக்காக இருந்தால் அதிகட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

    டெர்ம் டெபாசிட்: 200 ரூபாய் முதல் டெபாசிட் செய்து சேமிப்பைத் தொடங்கலாம் வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் அஞ்சலகத்தில் டெர்ம் டெபாசிட் பெயரில் பெறலாம். இந்தத் திட்டத்தில் ஒரு வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை 7 சதவீதமும், 5 வருடம் முதலீடு செய்யும் போது 7.8 சதவீத லாபத்துடன் வரி விலக்கும் கிடைக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: