முகப்பு /செய்தி /வணிகம் / போஸ்ட் ஆபீஸ் கணக்கின் பேலன்ஸை தெரிந்து கொள்வது இவ்வளவு ஈஸியா!

போஸ்ட் ஆபீஸ் கணக்கின் பேலன்ஸை தெரிந்து கொள்வது இவ்வளவு ஈஸியா!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

பேலன்ஸை ஆன்லைனிலே தெரிந்து கொள்ளலாம். தேவைப்பட்டால் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஞ்சல் அலுவலகத்தில் நடைமுறையில் உள்ள பிபிஎஃப் , சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற பல்வேறு சேமிப்புத்திட்டங்களின் விபரங்களை வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் இல்லாமல் கூட எங்கிருந்தும் தங்களின் சேமிப்புக் கணக்குத் தகவலை பெறுவதற்கான வசதிகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, பல்வேறு சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதிலும் கொரோனா தொற்றிற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, எதில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் என தேட ஆரம்பிக்கின்றனர் பொதுமக்கள். அவர்களுக்காகவே அஞ்சல் அலுவலகத்தில் அதிக வட்டித் தரக்கூடிய பல சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள், மாதாந்திர வருமான திட்டம் என பல முதலீட்டு திட்டங்கள் செயல்பட்டுவருகிறது.

Digital currency : ஆசையும் ஆர்வமும் மட்டும் இருந்தா போதாது.. டிஜிட்டல் கரன்சி பற்றி இதுவும் தெரிஞ்சுக்கோங்க!

இந்த திட்டங்களில் முதலீடு செய்யும் ஒவ்வொரு முதலீட்டாளர்களும் எவ்வளவு முதலீடு செய்துள்ளோம் என்பதை அறிந்து கொள்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்கும் வகையில் இ- பாஸ்புக் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் டிஜிட்டல் திட்டம்:

இந்தியா முழுவதும் அனைத்துத்துறைகளையும் மக்கள் எளிமையாக கையாள்வதற்கு வசதியாக பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான், சிறு சேமிப்புத் திட்டக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகளைப் பெறுவதற்காக இ- பாஸ்புக் என்ற வசதி செயல்படும் என கடந்த அக்டோபர் 12 ஆம் இந்திய அஞ்சல் துறை அறிவித்தது. இதன் மூலம் நெட் பேங்கிங், போன் பேங்கிங் வசதி இல்லாமலே தபால் நிலையங்கள் மூலமாக இ- பாஸ்புக் சேவையைப் பெற முடியும்.

மேலும் மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் இறுதியாக மேற்கொண்ட பத்து பரிவர்த்தனைகளைப் பார்க்க முடிவதோடு டவுன்லோடும் செய்துக் கொள்ளலாம். இந்த வசதி தற்போது பொதுவருங்கால வைப்பு நிதி – பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டங்களுக்கு முதற்கட்டமாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து சேமிப்புத்திட்டங்களிலும் நடைமுறைப்படுத்தவும், எதிர்காலத்தில் முழு ஸ்டேட்மெண்டையும் பார்க்கும் வகையிலான வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள படி, இ- பாஸ் புக் வசதியின் மூலம், இருப்புப்பணம் தொடர்பான விசாரணை (balanced enquiry), மினி ஸ்டேட்மென்ட்( mini statement), மற்றும் எதிர்காலத்தில் full statement யையும் எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx அல்லது https://www.ippbonline.com/ என்ற இணையதளப்பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும். பின்னர் E- Passbook என்பதை கிளிக் செய்து உங்களின் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

கிரெடிட் கார்டு பில்லை சரியான தேதியில் கட்ட முடியவில்லையா? இனிமேல் பயம் வேண்டாம்!

தொடர்ந்து கேப்சா குறியீட்டை டைப் செய்து balanced enquiry மற்றும் மினி ஸ்டேட்மென்ட்( mini statement) என்பதை தேர்வு செய்து ஆன்லைனிலே தெரிந்து கொள்ளலாம். தேவைப்பட்டால் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு துவங்கும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் நிச்சயம் இருக்க வேண்டும். இல்லாவிடில் இந்த வசதிகளை உங்களால் பெற முடியாது. எனவே உடனடியாக அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று மொபைல் எண்ணை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Govt Scheme, India post, Post Office, Savings