போஸ்ட் ஆபீஸில் செயல்படும் மிகச் சிறந்த சிறுசேமிப்பு திட்டங்களான தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் டெர்ம் டெபாசிட் ஆகியவற்றின் வட்டி ரொக்கமாக வாடிக்கையாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் வட்டி பணம் கிடைக்க வாடிக்கையாளர்கள் இந்த கணக்குடன் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது தபால் சேமிப்பு கணக்கை இணைக்க வேண்டும் என என்று அஞ்சல் துறை வலியுறுத்தியது. இந்த புதிய மாற்றம் 1 ஏப்ரல் 2022 முதல் அமலுக்கு வந்தது.
அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட குறிப்பில் "கணக்கு வைத்திருப்பவரின் அஞ்சலக சேமிப்புக் கணக்கு அல்லது வங்கிக் கணக்கில் மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர் தனது சேமிப்புக் கணக்கை மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துடன் இணைக்க முடியாவிட்டால், மாதந்தோறும் வருமானத் திட்டம் மற்றும் டெர்ம் டெபாசிட் கணக்குகள், நிலுவையில் உள்ள வட்டியை அஞ்சலக சேமிப்புக் கணக்கு அல்லது காசோலை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்!
ஒருவரின் வங்கி சேமிப்புக் கணக்கை தபால் அலுவலக நேர வைப்புத்தொகையுடன் இணைக்க, டெபாசிட் செய்பவர் ஒரு ECS படிவத்தை, ரத்து செய்யப்பட்ட காசோலையுடன் அல்லது வங்கிக் கணக்கு பாஸ்புக்கின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் எம்ஐஎஸ்/எஸ்சிஎஸ்எஸ்/டிடி கணக்கு பாஸ்புக் ஆகியவற்றின் மூலம் சரிபார்க்க வேண்டும்” என தெரிவித்திருந்தது. இதுவரை இதை செய்யாதவர்கள் வரும் நாட்களில் கட்டாயம் இதை செய்து முடித்து விடுங்கள். இப்போது இந்த பதிவில் இந்த 3 சேமிப்பு திட்டங்களுடன் தபால் அலுவல சேமிப்பு கணக்கை எப்படி இணைப்பது? என பார்க்கலாம்.
Axis Bank : இனிமேல் மினிமம் பேலன்ஸ் ரூ.12,000.. ஷாக்கில் வாடிக்கையாளர்கள்!
கணக்கு வைத்திருப்பவர் தனது போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்குடன் தனது MIS/SCSS/TD கணக்குகளை இணைப்பதற்கான SB-83 படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய ஒப்புதலுக்கான எஸ்சிஎஸ்எஸ்/டிடி கணக்குப் புத்தகம் மற்றும் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் நோக்கத்திற்காக அஞ்சல் அலுவலகத்திற்கு அவரது அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு பாஸ்புக்கை எடுத்துச் செல்ல வேண்டும்.விவரங்கள் சரிபார்க்கப்பட்டு கணக்கு இணைக்கப்படும். போஸ்ட் ஆபீஸில் செயலப்பாட்டில் இருக்கும் சிறு சேமிப்பு திட்டங்களில், சுகன்யா சம்ரித்தி யோஜனா தற்போது 7.6%, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 7.4% மற்றும் PPF 7.1% வழங்குகிறது.சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank accounts, Post Office, Savings