Home /News /business /

போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் இருந்தால் மட்டும் போதும்.. இத்தனையும் சாத்தியம்!

போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் இருந்தால் மட்டும் போதும்.. இத்தனையும் சாத்தியம்!

போஸ்ட் ஆபீஸ் சேவிங்க்ஸ்

போஸ்ட் ஆபீஸ் சேவிங்க்ஸ்

Post Office: போஸ்ட் ஆபீஸ் ஒன்றில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருந்தால், அதில் RD அக்கவுண்ட்டை தொடங்கலாம்.

    பணத்தை சேமிக்க எஃப்.டி மற்றும் ஆர்டி என்றழைக்கப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit - நிலையான வைப்பு தொகை) மற்றும் ரெக்கரிங் டெபாசிட் (Recurring Deposit - தொடர் வைப்புத்தொகை) உள்ளிட்ட 2 சேவிங்ஸ் ஆப்ஷன்கள் பிரபலமாக இருந்து வருகின்றன. இதில் ரெக்கரிங் டெபாசிட் அதாவது RD என்பது தொடர்ந்து சேமிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். மேலும் சேமிப்பதற்காக பெரிய தொகையை எடுத்து வைக்க முடியாது என்ற நிலையில் உள்ள முதலீட்டாளர்களுக்கு RD எனது மிகவும் விருப்பமான முதலீட்டு வழியாக இருந்து வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க RD உதவுகிறது. வழக்கமான சேமிப்பிற்கான நம்பகமான மற்றும் விருப்பமான முதலீட்டு கருவிகளில் ஒன்றாக RD இருக்கிறது. குறைந்தபட்ச அபாயத்துடன் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் RD அக்கவுண்ட்டை ஓபன் செய்து, அதில் ஒவ்வொரு மாதமும் தங்கள் வருமானத்தின்ஒரு பகுதியைச் சேமிக்கலாம். தனிநபர் ஒருவர் போஸ்ட் ஆபீஸ் ஒன்றில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருந்தால், அதில் RD அக்கவுண்ட்டை தொடங்கலாம். நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி, ஆன்லைனில் RD அக்கவுண்ட்டை ஓபன் செய்து கொள்ளலாம். நெட் பேங்கிங் வசதி இல்லாதவர்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ் கிளைக்கு சென்று அதற்காக விண்ணப்பிக்கலாம்.

    இதையும் படிங்க.. State bank வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேராக செல்ல வேண்டாம்.. காரணம் இருக்கு!

    இல்லை என்றால் விரும்பும் போஸ்ட் ஆபிஸ் கிளைக்கு சென்று, படிவத்தைப் பூர்த்தி செய்து, KYC ஆவணங்கள் மற்றும் டெபாசிட் ஸ்லிப்பை சமர்பிப்பதன் மூலமும் ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்ட்டை ஓபன் செய்யலாம். பின்வரும் வழிமுறிகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் போஸ்ட் ஆபிஸ் RD அக்கவுண்ட்டை ஓபன் செய்யலாம்.

    * https://ebanking.indiapost.gov.in என்ற லிங்கிற்கு விசிட் செய்யவும்

    * யூஸர் ஐடி மற்றும் லாகின் பாஸ்வேர்டை என்டர் செய்யவும்

    * மெனுவில் இருக்கும் 'General Service' என்ற tab-ஐ கிளிக் செய்து, பின் 'Service request' tab-ஐ கிளிக் செய்யவும்

    * 'Service request' என்பதன் கீழ், 'New Requests' என்ற tab-ஐ கிளிக் செய்ய வேண்டும்

    * அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்களில் இருந்து விருப்பங்களிலிருந்து, 'RD Accounts- Open an RD Account' என்பதை கிளிக் செய்து கொள்ளளவும்

    * இப்போது தோன்றும் புதிய பேஜில் தேவையான அனைத்து விவரங்களையும் என்டர் செய்யவும்

    * 'Submit' என்பதை கிளிக் செய்து அடுத்த பேஜில் நீங்கள் என்டர் செய்த விவரங்களை சரிபார்க்கவும்

    * உங்கள் 'ட்ரான்ஸேக்ஷன் பாஸ்வேர்டை' என்டர் செய்யவும்

    இந்த செயல்முறை வெற்றிகரமாக முடிந்ததும், RD அக்கவுண்டின் முதிர்வு தேதி மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் டெபாசிட் செய்ய வேண்டிய தொகையுடன் கூடிய விவரங்களை காணலாம்.

    இதையும் படிங்க.. தேவையில்லை என அக்கவுண்டை மூடினால் கூட கட்டணம்... போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வந்திருக்கும் புது விதிமுறை!

    மொபைல் பேங்கிங் மூலம் பணம்..

    டிஜிட்டல் சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் பதிவு செய்த பிறகு, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்(IPPB) அப்ளிகேஷனை பயன்படுத்தி அக்கவுண்ட்டில் ஆன்லைன் டெபாசிட்களை செய்யலாம். IPPB-ஆனது முதலீட்டாளர்களை அக்கவுண்ட்டில் மாதாந்திர RD பேமெண்ட்களை ஆன்லைன் மூலம் செய்ய அனுமதிக்கிறது. மாதாந்திர வைப்பு தொகைக்கான குறைந்தபட்ச தொகை ரூ. 100. ஆண்டுக்கு 5.8% வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை அக்கவுண்ட்டில் சேர்க்கப்படும். அக்கவுண்ட் ஓபன் செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு (60 மாதாந்திர வைப்பு தொகைகள்) மெச்சூரிட்டி ஆகும்.

    முன்கூட்டியே க்ளோஸ் செய்வது எப்படி.?

    சம்பந்தப்பட்ட போஸ்ட் ஆபிஸில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம், அக்கவுண்ட் தொடங்கிய நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு RD கணக்கை முன்கூட்டியே க்ளோஸ் செய்யலாம். அப்படி க்ளோஸ் செய்தால் PO Savings Account-ன் வட்டி விகிதம் பொருந்தும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Post Office, Savings

    அடுத்த செய்தி