வங்கியை காட்டிலும் போஸ்ட் ஆபீஸில் ஏன் சேமிப்பு கணக்கு தொடங்கலாம்? சேமிப்பு(post office) கணக்கில் கிடைக்கும் சலுகைகள், பயன்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
சமீப காலமாக வங்கியை காட்டிலும் போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு தொடங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் இருக்கு. ஏனெனில் சில வங்கிகளில் சேமிப்பு கணக்குக்கு தரும் வட்டியை விட போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கில் நல்ல வட்டி கிடைக்கிறது. அதிலும் ஜாயிண்ட் அக்கவுண்ட் என்றால் மிகவும் நல்ல தேர்வு.போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் வரிச்சலுகையும் கிடைப்பது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த விஷயமாக இருக்கிறது. சில முக்கியமான தனியார் வங்கிகள் அல்லது பொதுத்துறை வங்கிகளில் கூட சேமிப்பு கணக்குக்கு மிக குறைந்த வட்டியே வழங்கப்படுகிறது,.
ஆனால், போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் 4 சதவீத வட்டி லாபம் பெறலாம். போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கை ஆன்லைனில் தொடங்க முடியும். அதே நேராக சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அக்கவுண்டை ஓபன் செய்து சேமிப்பை தொடங்கலாம். இதற்கு ஆதார் உள்ளிட்ட கேஒய்சி ஆவணங்கள் சரிபார்ப்பு செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் மினிமம் பேலன்ஸ் விவரங்கள் சரிபார்ப்பு செய்யப்படும். அந்த சமயத்தில் மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதமும் விதிக்கப்படும் இதையும் நோட் செய்ய மறவாதீர்கள்.
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும். வங்கிகளில் சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் அனைத்தும் சலுகைகளும் டெபிட் கார்டு, செக் புக், அன்லைன் பேக்கிங், நெட் பேக்கிங், பணப்பரிவர்தனை என அனைத்தும் போஸ்ட் ஆபீஸ் கணக்கிலும் வழங்கப்படுகிறது. ஏடிஎம்மில் பணமும் எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கா? அப்ப இந்த அப்டேட் பற்றி நீங்க தெரிஞ்சுக்கணும்!
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், ரேஷன் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு தனி நபர் அடையாளம் மற்றும் வீட்டு முகவரி அடையாளத்திற்காக ஆவணமாக கேட்கப்படும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Post Office, Savings