• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • நல்ல லாபத்திற்கு கேரண்டி தரும் போஸ்ட் ஆஃபீஸ் திட்டங்கள் இவை தான்!

நல்ல லாபத்திற்கு கேரண்டி தரும் போஸ்ட் ஆஃபீஸ் திட்டங்கள் இவை தான்!

போஸ்ட் ஆஃபீஸ் அக்கவுண்ட்

போஸ்ட் ஆஃபீஸ் அக்கவுண்ட்

நீங்கள் வங்கிகளுக்கு ஏறி இறங்க வேண்டிய அவசியமே இல்லை. தபால் நிலையம் சென்றாலே போதும்.

  • Share this:
    நல்ல வருவாய் மற்றும் லாபத்திற்கு ஆதாரமாய் விளங்கும் போஸ்ட் ஆஃபீஸ் திட்டங்கள் குறித்து தான் பார்க்க போகிறோம்.

    சேமிப்பில் லாபம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் நீண்ட கால சேமிப்பு அதிக முதிர்வு காலம் கொண்ட சேமிப்புகளை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக பார்க்க வேண்டியது வட்டி மற்றும் பணத்திற்கான பாதுகாப்பு. அந்த வகையில் போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் நல்ல வருவாய் தரக்கூடிய பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைக்கூடிய திட்டங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    சிறப்பான லாபத்தை வழங்கும் சேமிப்பு திட்டங்களுக்கு நீங்கள் வங்கிகளுக்கு ஏறி இறங்க வேண்டிய அவசியமே இல்லை. தபால் நிலையம் சென்றால் போதும். முதலில் டைம் டெபாசிட் திட்டம். இது, ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டமாகும். இதில் நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க துவங்கினால் 5.5% வரை வட்டி பெற முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் 13 ஆண்டுகள் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை கைநிறைய பெறலாம். அதே போல்5 ஆண்டு திட்டங்களை தேர்வு செய்தால் உங்களுக்கு 6.7% வரை வட்டி கிடைக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அடுத்தது சேமிப்பு கணக்கு திட்டம். இதன் மூலம் நீங்கள் பணத்தை சேமிக்க துவங்கினால் உங்களுக்கு கிடைக்கும் வட்டி 4.0%. தபால் நிலையத்தில் இருக்கும் மாதாந்திர சேமிப்பு திட்டம் முதலீட்டாளர்களுக்கு கைக்கொடுக்கும் ஒரு சேமிப்பு திட்டமாகும். இதில் நீங்கள் முதலீடு செய்தால் நீங்கள் ஆண்டுக்கு 6.6% வட்டியை பெற முடியும். மேலும் 10.91 ஆண்டுகளில் உங்களின் முதலீட்டை இரட்டிப்படைய செய்யலாம்.இதுப்போன்ற பல்வேறு நல்ல வருவாய் தரக்கூடிய திட்டங்கள் அஞ்சல் நிலையத்தில் செயல்பாட்டில் உள்ளன.

    மூத்த குடிமக்கள் கூட பயனடையும் திட்டங்கள் இங்கு உள்ளன. அதில் ஒன்று தான் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். இதில் 7.4% வட்டி வழங்கப்படுகிறது. 9 ஆண்டுகள் வரை முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: