போஸ்ட் ஆபீஸ்(post office savings)தற்சமயம் பலரும் தேடி போய் பணத்தை சேமிக்கும் இடமாக மாறி வருகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் வட்டி, பணத்திற்கு பாதுகாப்பு மற்றும் அரசு அறிமுகப்படுத்திய சிறு சேமிப்பு திட்டங்கள். பெண் பிள்ளைகளுக்கு தனி சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் , கணவன் மனைவிகளுக்கான ஜாயிண்ட் அக்கவுண்ட், பிக்சட் டெபாசிட் திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் என அஞ்சல் சேமிப்பில் இருக்கும் பல சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
நீண்ட கால முதலீடுகளுக்கு போஸ்ட் ஆபீஸ் சிறந்த இடமாக விளங்குகிறது. இந்நிலையில் இதில் சேமிப்பு கணக்கு மற்றும் எந்தவிதமான கணக்கு வைத்திருக்கும்
வாடிக்கையாளர்களுக்கு இந்திய அஞ்சல் துறை முக்கியமான சில அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. ஆனால் பலருக்கு அதுக்குறித்த பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. சிலருக்கு புதியதாக வந்திருக்கும் அப்டேட் குறித்து தெரியாமல் இருக்கிறது. அந்த வகையில் ஏற்கெனவே போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் அல்லது அக்கவுண்ட் தொடங்க இருப்பவர்கள் இந்த முக்கியமான தகவலை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் . என்ன அப்டேட் அது வாங்க பார்க்கலாம்.
இதையும் படிங்க.. லோன் பெறுவது முதல் விசா வாங்குவது வரை.. வெளிநாட்டு கல்வியில் பெற்றோர்களின் பங்கு!
போஸ்ட் ஆபீஸில் இருக்கும் அனைத்து திட்டங்களில் அக்கவுண்ட்-ஐ முடித்துக் கொள்ளும்போது பாஸ் புத்தகத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். போஸ்ட் ஆபீஸில் செயல்பாட்டில் இருக்கும் எந்தவொரு அக்கவுண்ட் என்றாலும், அது நிறைவுபெறும் சமயத்தில் அல்லது முன்கூட்டியே முடித்துக் கொள்ளும் சமயத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு புத்தகத்தை கட்டாயம் ஒப்படைக்க வேண்டும். அக்கவுண்ட் மூடப்படுவது குறித்த தகவலை சரிபார்த்த பிறகு, ‘கணக்கு நிறைவு அறிக்கை’ தயார் செய்யப்பட்டு, வாடிக்கையாளருக்கு பிரிண்ட் எடுத்துக் கொடுக்கப்படும். ஒருவேளை வாடிக்கையாளர் அக்கவுண்ட் ஸ்டேட்மண்ட் வேண்டும் என்று கோரினால், எந்தவித கட்டணமும் வசூல் செய்யாமல் அதுவும் செய்து தரப்படும்.
இதையும் படிங்க.. லோன் பெறுவது முதல் விசா வாங்குவது வரை.. வெளிநாட்டு கல்வியில் பெற்றோர்களின் பங்கு!
அதே போல் போஸ்ட் ஆபீஸில் சாதாரண சேமிப்பு கணக்கு தொடங்கி எந்த விதமான முதலீடு கணக்கை வைத்திருந்தாலும் சரி அவர்கள் பான் எண், மொபைல் நம்பரை அந்த கணக்குடன் இணைக்க வேண்டும். ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு சரிபார்க்கப்பட வேண்டும் . மேலும் ரூ.20,000க்கு மேல் பணம் அனுப்பும்போதும், பெறும்போதும் மொபைல் நம்பரை சரிபார்க்க வேண்டும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.