• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருந்தால் போதும்.. இது எல்லாமே ஈஸியா கிடைக்கும்!

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருந்தால் போதும்.. இது எல்லாமே ஈஸியா கிடைக்கும்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்க்ளுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

  • Share this:
    வங்கி சேமிப்பு கணக்குகளைக் காட்டிலும் பொதுமக்கள் அஞ்சல் சேமிப்பு திட்டங்களை அதிகம் நம்பி முதலீடு செய்கின்றனர். குறிப்பாக வருங்கால சேமிப்பு திட்டங்களுக்கு அதிகம் போஸ்ட் ஆபீஸை நாடி செல்கின்றனர். போஸ்ட் ஆபீஸில் இருக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டம், தேசிய பென்சன் திட்டங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பை  பெற்றுள்ளது. அஞ்சல் சேமிப்பில் நல்ல வட்டி கிடைப்பதும் வங்கியைக் காட்டிலும் லாபம் கிடைப்பது வாடிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது.

    இப்படிபட்ட போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்ட்ங்களை தொடங்கியவர்கள், தொடங்க போகிறவர்கள், போஸ்ட் ஆபீஸ் ஏ.டி.எம் கார்டு தேவைப்படுபவர்கள் என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விவரங்களை பற்றி தன் இந்த பதிவில் பர்க்க போகிறோம். போஸ்ட் ஆபீஸில் எதாவது சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் அக்கவுண்டுக்கு E-banking வசதியை பெற, விண்ணப்ப படிவம் அல்லது இணைய வங்கி படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதே போல் 'ஏடிஎம் கார்டு / இணையம் / மொபைல் / SMS வங்கி சேவை கோரிக்கை படிவத்தை பெற இந்த https: / /www.indiapost.gov.in/VAS/Pages/Form.aspx வலைத்தளத்திற்கு சென்றாலே போதும். அனைத்து வசதிகளும் இங்கே கிடைக்கும். தேவையான படிவத்தை நிரப்பி அதை அஞ்சல் அலுவலகத்தில் கொடுத்தாலே போதும்.

    இதை தவிர்த்து நீங்கள் RD அல்லது டைம் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பினால்அதை இணைய வங்கி மூலமாகவும் செய்யலாம். தபால் அலுவலக இணைய வங்கியிடமிருந்து ‘Stop Cheque’ கோரிக்கை அல்லது கால அட்டவணையை தேர்வு செய்யலாம். தகுதியான தொகைக்கு, உங்கள் PPF கணக்கிலிருந்து நிதிகளையும் திரும்பப் பெறலாம்.

    வயசான காலத்தில் பிள்ளைகள் கைவிட்டாலும் இந்த திட்டம் கைவிடாது!

    போஸ்ட் ஆபீஸ் ஏடிஎம் கார்டு வாங்காதவர்கள் அதற்கான படிவத்தை இதே லிங்க்ல் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் நேராக போஸ்ட் ஆபீஸ் சென்றும் வாங்கி கொள்ளலாம். அந்த படிவத்தில் கேட்கப்படும் பெயர், வீட்டு முகவரி, அக்கவுண்ட் எண், பான் எண் ஆகியவற்றை நிரப்பி சமர்பித்தாலே போதும் 2 அல்லது 3 நாட்களில் உங்கள் வீடு தேடி ஏடிஎம் கார்டு வந்து விடும்.
    கார்டு வாங்கிய பிறகு அதற்கு நீங்கள் 1 வருடத்திற்கு ஆண்டு கட்டணம் கட்ட தேவையில்லை.அதே போல் தபால் நிலையத்தின் ஏடிஎம்மில் இந்த கார்டைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு இலவசமாக 5 முறை வரை பணம் எடுக்கலாம். ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை கார்டில் இருந்து எடுக்க முடியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உங்கள்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: