Home /News /business /

போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்க நினைப்பவர்கள் நோட் செய்ய வேண்டிய விஷயங்கள்!

போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்க நினைப்பவர்கள் நோட் செய்ய வேண்டிய விஷயங்கள்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்க நினைப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

  • News18
  • Last Updated :
    போஸ்ட் ஆபீஸ் (PO) சேமிப்புக் கணக்கு என்பது நாட்டில் மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றும் அணுகக்கூடிய சேமிப்புக் கணக்குகளில் ஒன்றாக உள்ளது. மேலும், வருமான வரிச் சட்டத்தின் 80TTA பிரிவின் கீழ், ஒரு நிதியாண்டில் சம்பாதித்த ரூ 10,000 (அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் சேர்த்து) வரையிலான வட்டிக்கு வரி விலக்கு பெறத் தகுதியுடையது. எனவே போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்க நினைப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை இங்கு பார்ப்போம்.

    தகுதி: வயது வந்தவர் அல்லது மூத்த குடிமக்கள் மட்டும் கணக்கை தொடங்கலாம். குறைந்தபட்சம் 10 வயதுடைய மைனர்; மைனர் சார்பாக ஒரு பாதுகாவலர்; மற்றும்  மனநலம் குன்றியவர் சார்பாக ஒரு பாதுகாவலரும் இந்த கணக்கை தொடங்க முடியும்.

    வட்டி விகிதம்: தற்போது, ​​இந்தக் கணக்கிற்கு ஆண்டுக்கு 4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதி மற்றும் கடைசி நாளின் குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். இந்தக் காலக்கட்டத்தில், மீதித் தொகை ரூ.500க்குக் குறைவாக இருந்தால், வட்டி எதுவும் வரவு வைக்கப்படாது.

    சொந்த வீடு கட்ட ஆசை இருந்தால் மட்டும் போதாது.. இந்த விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும்!

    டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுதல்: குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 500 ஆகும். அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. மேலும், குறைந்தபட்சத் தொகை ரூ. 500க்கு குறையும் எந்தப் பணமும் அனுமதிக்கப்படாது.ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், கணக்கு இருப்பு குறைந்தபட்சம் ரூ. 500 ஆக இருக்க வேண்டும், இல்லையென்றால் கணக்கு பராமரிப்பு கட்டணமாக ரூ. 50 கழிக்கப்படும். இருப்பு பூஜ்ஜியமாக மாறினால் கணக்கு தானாகவே மூடப்படும்.

    வருமான வரி செலுத்த தாமதமானால் நீங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் தெரியுமா?

    அமைதியான கணக்கு: ஒரு கணக்கிலிருந்து தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளுக்கு எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றால், அது அமைதியாக/செயலற்றதாகக் கருதப்படும். அதை மீண்டும் திறக்க,(KYC) ஆவணங்கள் மற்றும் போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக் ஆகியவற்றுடன் ஒருவர் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மற்ற வசதிகள் : காசோலை புத்தகம், ஏடிஎம் கார்டு, நெட் பேங்கிங்/மொபைல் பேங்கிங், அடல் பென்ஷன் யோஜனா (APY), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா (PMSBY), மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY). கூடுதல் விவரங்கள் இந்த லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
    Published by:Sreeja
    First published:

    Tags: India post, Post Office, Savings

    அடுத்த செய்தி