ஹோம் /நியூஸ் /வணிகம் /

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் முக்கியமான சேமிப்பு திட்டங்களும்.. அதற்கான வட்டியும்!

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் முக்கியமான சேமிப்பு திட்டங்களும்.. அதற்கான வட்டியும்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

post office saving : போஸ்ட் ஆபீஸ் வட்டி விவரங்களை தெரிந்து கொண்டு சேமிப்பு திட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  போஸ்ட் ஆபீஸில் (post office ) இருக்கும் முக்கியமான சேமிப்பு திட்டங்களும், அதற்கு வழங்கப்படும் வட்டி விவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

  புது வருடம் பொறந்தாச்சு. கண்டிப்பாக புது வருடத்தில் இருந்தாவது ஏதாவது ஒரு சேமிப்பை தொடங்க வேண்டும் என பலரும் திட்டமிட்டு இருப்பார்கள். குழந்தைகளின் நலனுக்காக, திருமண செலவு, கல்வி செலவு, எதிர் கால செலவு ஏகப்பட்டதை திட்டமிட இந்த வருடமாவது ஏதாவது ஒரு சேமிப்பை கட்டாயம் தொடங்க வேண்டும் என நினைத்திருப்பவர்கள் இந்த பதிவை கொஞ்சம் பாருங்கள். சேமிப்பு என்றவுடன் பலருக்கு இப்போது போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு ஞாபகத்திற்கு வரும் அளவுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மக்களை கவர்ந்து வருகிறது.

  இதையும் படிங்க.. நாளை முதல் போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வரும் முக்கிய மாற்றம் இதுதான்.. மறக்காம நோட் பண்ணிக்கோங்க!

  மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 9 வகையான சிறு சேமிப்பு திட்டங்களும், காப்பீடு திட்டங்களும் மக்களை பெருமளவில் கவர்ந்து விட்டது. பலரும் இந்த திட்டங்களில் சேமிப்பை தொடங்க, முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நீங்களும் புது வருடத்தில் போஸ்ட் ஆபீஸ்ல் ஏதாவது ஒரு சேமிப்பை தொடங்கி விடலாம் என நினைத்தால் அதற்கு முன்பு போஸ்ட் ஆபீஸில் இருக்கும் முக்கியமான, நல்ல லாபம் தரக்கூடிய சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி எவ்வளவு என்ற விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள். திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு வட்டியை பற்றி தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். அதுமட்டுமில்லை 2022 ஆம் ஆண்டு வங்கியிலும் சரி போஸ்ட் ஆபீஸிலும் சரி பல மாற்றங்கள் வரவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டன.

  அதனால் தெளிவாக வட்டி விவரங்களை தெரிந்து கொண்டு சேமிப்பு திட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.

  1. சுகன்யா சமர்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) வருடத்திற்கு 7.6% வட்டி

  2. கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) 6.9% வட்டி

  3. பொது வைப்பு நிதி (Public Provident Fund) வருடத்திற்கு 7.1% வட்டி

  4. 5 வருட தேசிய சேமிப்பு பத்திரம் (5-year National Savings Certificate) 6.8% வட்டி

  5. 5 வருட மாத வருமான கணக்கு (5-year Monthly Income Account) மாதம் 6.6% வட்டி

  இதையும் படிங்க.. SBI பேங்கில் இருக்கும் சூப்பரான சேமிப்பு திட்டத்தில் இதுவும் ஒன்று!

  6. 5 வருட மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்( 5 year Senior Citizen Savings Scheme) 7.4% வட்டி

  7. 5 வருட ரெக்கரிங் டெபாசிட் (5-year Recurring Deposit) 5.8%

  8. 1. வருடம் டைம் டெபாசிட் 5.5%

  9. 2. வருடம் டைம் டெபாசிட் 5.5%

  10. 3. வருடம் டைம் டெபாசிட் 5.5%

  11. 5. வருடம் டைம் டெபாசிட் 6.7%

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Money, Post Office, Savings