• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தபால் நிலையம் வழங்கும் RD கணக்குகள் பற்றிய விவரங்கள்

தபால் நிலையம் வழங்கும் RD கணக்குகள் பற்றிய விவரங்கள்

தபால் நிலையம் வழங்கும் RD கணக்குகள்

தபால் நிலையம் வழங்கும் RD கணக்குகள்

Post Office Recurring Deposit Tenure : தபால் நிலையத்தில் ரெக்கரிங் டெபாசிட் கணக்கைத் திறப்பது, உங்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும். தபால் நிலைய சேமிப்புத் திட்டத்தின் கீழ் 5 வருட தபால் நிலைய தொடர் வைப்புக் கணக்கைத் திறக்கலாம்.

  • Share this:
    பலர் வங்கிகளில் முதலீடு செய்வதை விட தபால் நிலையத்தில் சேமிக்க விரும்புகிறார்கள். அதே போல, தற்போது பிரபலமான முதலீட்டு மற்றும் சேமிப்புத் தேர்வாக இருக்கும் ரெக்கரிங் டெபாசிட்டுகளிலும் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். தபால் நிலையத்தை பலரும்  விரும்ப காரணம், தபால் நிலையம் வழங்கும் கவர்ச்சிகரமான வட்டி விகிதம் தான். பலர் வங்கிகளில் முதலீடு செய்வதை விட தபால் நிலையத்தில் சேமிக்க விரும்புகிறார்கள்.

    அதே போல, தற்போது பிரபலமான முதலீட்டு மற்றும் சேமிப்புத் தேர்வாக இருக்கும் ரெக்கரிங் டெபாசிட்டுகளிலும் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். தபால் நிலையத்தை பலரும் விரும்ப காரணம், தபால் நிலையம் வழங்கும் கவர்ச்சிகரமான வட்டி விகிதம் தான்.

    தபால் நிலையத்தில் தொடர் வைப்புநிதிக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டிற்கான தபால் நிலைய RD வட்டி விகிதம் ஆண்டுக்கு 5.8 சதவீதமாக உள்ளது. தபால் நிலையத்தில் ரெக்கரிங் டெபாசிட் கணக்கைத் திறப்பது, உங்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும். தபால் நிலைய சேமிப்புத் திட்டத்தின் கீழ் 5 வருட தபால் நிலைய தொடர் வைப்புக் கணக்கைத் திறக்கலாம்.

    தபால் நிலையத்தில் தொடர் வைப்புத் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

    பின்வரும் கூட்டு வட்டி ஃபார்முலா (compound interest formula) தபால் நிலைய தொடர் வைப்புத்தொகைக்கான வட்டியைக் கணக்கிடப் பயன்படுகிறது :

    A = P x (1 + R / N) (Nt)

    இந்த ஃபார்முலாவின்படி, RD எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.

    •  ஒரு நபர் மாதா மாதம் செலுத்தும் தொகை - ரூ. 7,000,

    • வட்டி விகிதம் 5.8 %,

    • RD கணக்கின் கால அளவு – 5 ஆண்டுகள்

    •  முதலீடு செய்த நபருக்கு, RD முதிர்வடைந்த பிறகு, ரூ. 4,87,877 வட்டியுடன் கிடைக்கும்.

    • நீங்கள் முதலீடு செய்த தொகை – ரூ. 4,20,000

    • RD வட்டி வருமானம் – ரூ. 67,878


    ALSO READ |  SBI வாடிக்கையாளர்களே ஜாக்கிரதை.. இனிமே உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஏன் தெரியுமா?

    இதுவே, பத்து ஆண்டுகளுக்கு RD கணக்கில் பணம் செலுத்தினால், முதலீடு செய்த நபருக்கு, RD முதிர்வடைந்த பிறகு, ரூ. 11,38,531  வட்டியுடன் கிடைக்கும்.

    • நீங்கள் முதலீடு செய்த தொகை – ரூ. 8,20,000

    • RD வட்டி வருமானம் –  ரூ. 2,98,531


    தபால் நிலையம் குறுகிய கால RD கணக்குகளை வழங்குகிறதா? 

    நீங்கள் எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்!

    அதே போல, தபால் நிலையத்தில், குறுகிய கால அளவுகளிலும் RD கணக்குகள் தொடங்கப்படுகின்றன. பலரின் குறுகிய கால தேவைகளுக்கு ஏற்றவாறு, RD இல் முதலீடு செய்து கொள்ளலாம்.
    பெரும்பாலான முதலீட்டாளர்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் எதிர்கொள்ளக் கூடிய சாத்தியமான செலவுகள் மற்றும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க குறுகிய மற்றும் நடுத்தர கால அளவிலான RD முதலீடுகளை தேர்வு செய்கிறார்கள்.

    ALSO READ |  கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை எங்கு கொடுக்க வேண்டும்? கொடுத்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?

    ஆனால், தபால் நிலையத்தில் குறுகிய கால வைப்புநிதிகள் வழங்கப்படுவதில்லை.

    தபால் நிலைய ரெக்கரிங் டெப்பாசிட் கணக்குகளின் குறைந்த பட்ச சேமிப்பு காலம் என்ன?

    தபால் நிலையம் வழங்கும்  தொடர் வைப்புநிதி கணக்குகளின் குறைந்த பட்ச முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதாவது, தபால் நிலைய RD கணக்குகள் நடுத்தர காலஅளவிலான RD கணக்குகளை வழங்குகின்றன. 5 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் உங்கள் சேமிப்பை நீட்டிக்க விரும்பினால், அதனை நீட்டிக்கலாம்.
    நீங்கள் தபால் நிலையத்தில் சேமிக்க விரும்பினால், உங்கள் RD கணக்கின் குறைந்த பட்ச காலம் ஐந்து ஆண்டுகள்.

    ALSO READ |  தொடர்ச்சியான வைப்புநிதிகளுக்கு வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதம் வழங்குகின்றன? முழு விவரம்!

    5 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிக்கப்பட்ட RD கணக்குகள் தொடர்ந்து கூடுதலான வட்டியை ஈட்டுகின்றன. இருப்பினும், நீங்கள் RD கணக்கின் காலத்தை அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.

    தபால் நிலைய RD கணக்கின் வட்டி விகிதம் : 

    தபால் நிலையம், தற்போதைய நிதியாண்டில் ரெக்கரிங் டெப்பாசிட் கணக்கின் மீதான வட்டி விகிதத்தை, காலாண்டு அடிப்படையில் 5.8 சதவீதமாக வழங்குகிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் நீங்கள் செலுத்திய தொகையின் மீது வட்டி காம்பவுண்ட் வட்டியாக கணக்கிடப்பட்டு கணக்கில் சேர்க்கப்படும்.

    •  தபால் நிலையம் RD இன் குறைந்தபட்ச கால அளவு 5 வருடங்கள்.

    • நீங்கள் ரூ. 500 முதல் தபால் நிலையத்தில் RD கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டிற்கு இதுவரை வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

    • தபால் நிலையத்தில் இருவரின் பெயரில் கூட்டுக் கணக்கையும் தொடங்கலாம்.

    • தபால் நிலைய RD கணக்குத் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவேறிய பிறகு, நீங்கள் அதிலிருந்து கடன் பெறும் வசதியும் உள்ளது. உங்கள் கணக்கின் இருப்புத் தொகையில் 50% வரை கடனாகப் பெறலாம்.

    • 6 மாதங்கள் வரை முன்கூட்டியே நீங்கள் மாதாந்திர வைப்புத்தொகையைச் செலுத்தலாம்.


    RD கணக்கில் எவ்வாறு டெப்பாசிட் செய்யப்படுகிறது?

    ஒரு தபால் நிலைய RD கணக்கைத் திறக்கும் ஒரு நபர், 5 ஆண்டுகளில் மொத்தம் 60 டெப்பாசிட்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணக்கு தொடங்கும் போது முதல் டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.

    ALSO READ |  போஸ்ட் ஆஃபீஸில் ரெக்கரிங் டெபாசிட் செய்ய வட்டி விகிதம் எவ்வளவு? முழு விவரம் இதோ!

    1 முதல் 15ம் தேதிக்குள் கணக்கு தொடங்குபவர்கள் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். 15ஆம் தேதிக்குப் பிறகு கணக்கு தொடங்கினால், 16ஆம் தேதி முதல் மாத இறுதி வரை டெபாசிட் செய்ய வேண்டும். காசோலை அல்லது பணமாக டெபாசிட் செய்யலாம்.

    RD வைப்புநிதியை தாமதமாக செலுத்தினால் விதிக்கப்படும் அபராதம்

    RD கணக்கு விதிமுறைகளின் படி, ஒருவர் 4 முறை தொடர்ச்சியாக டெப்பாசிட் செய்யவில்லை என்றால், கணக்கு செயலிழக்கப்படும். அத்தகைய செயலற்ற கணக்கை இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் தொடங்கலாம்.

    தபால் நிலையத்தில் RD தள்ளுபடி

    கணக்கு வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே பணத்தை டெபாசிட் செய்வதை ஊக்குவிக்க தபால் நிலையத்தில் RD இன் முன்பண வைப்புநிதி அனுமதிக்கப்படுகிறது. இந்த தள்ளுபடிகள் பெரிய தொகையாக இருக்காது, ஆனாலும் சேமிப்பை அதிகரிக்க பங்களிக்கிறது.

    ALSO READ |  தொடர் வைப்பு நிதிக்கு வங்கிகள் கொடுக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் திட்டங்கள்!

    5 ஆண்டுகள் முதிர்வு காலம் உள்ள போஸ்ட் ஆபிஸ் RD கணக்கிலிருந்து பணம் எடுத்தல் : 

    தபால் நிலையத்தில் RD கணக்கில் ஒருவர் 5 ஆண்டுகள் முடியும் முன்னரே பணத்தை கணக்கிலிருந்து எடுக்கலாம். ஆனால் அதில் ஒரு நிபந்தனை உள்ளது. RD கணக்கைத் தொடங்கி 1 வருடம் முடிந்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி, கணக்கில் இருக்கும் தொகையில் 50% வரை மட்டுமே எடுக்க முடியும்.

    தபால் நிலையத்தில் RD கணக்கின் மீதான வரி விவரங்கள் : 

    RD கணக்கிற்கு, வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ், மக்கள் ஆண்டு வரி விலக்கு படி ரூ.1.5 லட்சம் வரை கோரலாம். மேலும், தபால் நிலைய RD திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். மேலும், ரூ. 10,000க்கும் அதிகமான வட்டிக்கு TDS விலக்கும் அளிக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: