• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 5 ஆண்டுகளில் 7 லட்சம் ரிட்டன் கிடைக்கும்... வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

5 ஆண்டுகளில் 7 லட்சம் ரிட்டன் கிடைக்கும்... வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

ரெக்கரிங் சேமிப்பு

ரெக்கரிங் சேமிப்பு

உச்ச வரம்பு எதுவும் இல்லை. தனியாகவோ இரண்டு நபர்களோ இணைந்து முதலீடு செய்யலாம்

  • Share this:
    சேமிப்பை பொறுத்தே லாபம். 5 ஆண்டுகள் கொண்ட ஒரு நல்ல சேமிப்பு திட்டத்தை தேடுபவர்களுக்கு கட்டாயம் இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டம் கைக்கொடுக்கும்.

    நீங்கள் தேர்ந்தெடுக்கும் சேமிப்பு திட்டம் உங்களுக்கு லட்சங்களில் லாபல் தந்தால் அதைவிட மிகச் சிறந்த தேர்வு வேறு இல்லை.
    சேமிப்பு என்பது கட்டாயம் ஒவ்வொரும் செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும். எதிர்காலத்தில் உங்களின் வாழ்வாதாரத்தை இந்த சேமிப்பு தான் தீர்மானிக்கிறது, வெறும் சேமிப்பு கணக்கு மட்டுமில்லை நல்ல வருவாய் தரும் திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்வதும் ஒரு நல்ல முடிவு தான். அதற்கு முன்பு என்னென்ன வகையான திட்டங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் தொடர்ச்சியாக இன்று போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் நல்ல லாபம் தரக்கூடிய ரெக்கரிங் டெபாசிட் திட்டம் குறித்து முதலில் பார்க்கலாம்.

    எப்போதுமே தபால் அலுவலக முதலீட்டுத் திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் கம்மியான முதலீடு தொகையைக் கொண்டு சேமிப்பை தொடங்கினாலும் உங்களுக்கு லட்சங்களில் முதிர்வு தொகை உறுதி. வட்டியும் நல்ல விகிதத்தில் சேர்த்து அளிக்கப்படும். இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள். ஆண்டுக்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச தொகை உச்ச வரம்பு எதுவும் இல்லை. தனியாகவோ இரண்டு நபர்களோ இணைந்து முதலீடு செய்யலாம். சிறுவர்களின் பெயரிலும் பெற்றோர் கணக்கு திறந்துகொள்ளலாம்.

    சம்பளம் வாங்கும் போது ரூ.1000 சேமித்தால் போதும்.. ரூ. 5 லட்சம் உங்கள் கையில்!

    கண்டிப்பாக உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தேர்வு செய்யும் சிறந்த முதலீடு திட்டமாக இது இருக்கும். உங்கள் பிள்ளைகளின் 6 வயதில் நீங்கள் இதை தொடங்கினால் கட்டாயம் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்ல வருமானத்தை நீங்கள் அவர்களுக்கு பரிசளிக்கலாம். அதாவது, நீங்கள் மாதம், 10,000 ரூபாய் டெபாசிட் செய்வதாக வைத்துக்கொள்வோம். ஐந்து ஆண்டுகள் மெச்சூரிட்டிக்கு பின் உங்கள் பணம் ரூ. 6,96,967 ரூபாயாக மாறியிருக்கும். வட்டில் எல்லாம் சேர்த்து மொத்தமாக 7 லட்சம் உங்கள் கையில் கிடைக்கும். அதே போல் இந்த திட்டத்தில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சம், தேவைப்பட்டால் கூடுதலாக 5 ஆண்டுகள் சேமிப்பு காலத்தை நீடித்துக் கொள்ளலாம். அப்படி நீடித்தால் உங்களின் முதிர்வு தொகை இருமடங்காக உயரும் . குறுகிய கால சேமிப்புக்கும் சரி, நீண்ட கால சேமிப்புக்கும் சரி இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டம் மிக சிறந்த தேர்வு என்றே சொல்லலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: