Home /News /business /

ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் அதிக வட்டி பெறுபவர்கள் யார்? கேள்விக்கான விடை இதோ!

ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் அதிக வட்டி பெறுபவர்கள் யார்? கேள்விக்கான விடை இதோ!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

Recurring Deposit Interest : RD கணக்குக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. எனவே RD சேமிப்பால் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
    முதலீடு செய்வது அல்லது சேமிப்பது எப்போதுமே அவசியம் தான். பல துறைகள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், முதலீடு மற்றும் சேமிப்பின் வடிவங்களும், வகைகளும் அதிகரித்துள்ளன. கடந்த காலத்தில், பெரும்பாலான மக்களின் சேமிப்பு, பணி ஓய்வுக்குப் பிந்தைய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வதாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. தற்போது பல காரணங்களுக்காக சேமிக்கப்படுகிறது.

    சிறு வயதிலிருந்தே, சேமிப்பு அல்லது முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நிச்சயமாக, மாறிவரும் தேவைகள், பொருளாதார நிலைமைகள் போன்றவற்றை இதற்கான காரணங்களாகக் கருதலாம். சிலர் சேமிப்பை எதிர்காலத்துக்கான வருமானமாக பார்க்கிறார்கள். பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான முதலீடுகள் அல்லது சேமிப்பை விரும்புகிறார்கள். அந்த வகையில், தொடர் வைப்புநிதி பலரும் விரும்பும் முதலீடு மற்றும் மாதாந்திர சேமிப்பாக இருக்கிறது.

    நாம் சேமிக்கத் தொடங்கினாலும், முதலீடு செய்யத் தொடங்கினாலும், முதலில் நாம் தெரிந்து கொள்ள விரும்புவது, நமக்கு எவ்வளவு வட்டி, வருமானம் கிடைக்கும் என்பது தான். எந்தவொரு சேமிப்பிற்கும் இந்தக் காரணம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் நீங்கள் சேமிக்க முடிவு செய்யும் போது, உங்கள் நிதித் திட்டமிடல் வட்டி விகிதத்தைப் பொறுத்து அமையும். தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் தொடர் வைப்புநிதியை, அதாவது RD வசதியை வழங்குகின்றன.

    தொடர்ச்சியான வைப்புநிதி முதலீடு அல்லது சேமிப்பிற்கான பாதுகாப்பான, மிகவும் ஃப்ளெக்சிபில் விருப்பமாகக் கருதப்படுகிறது. சேமிப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்புநிதியுடன் ஒப்பிடும்போது RD கணக்குக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. எனவே RD சேமிப்பால் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

    சேமிப்பு பழக்கம் மற்றும் நிதியை முறையாக கையாள்வதற்கான சிறந்த தேர்வாக மாதா மாதம் செலுத்தப்படும் RD கருதப்படுகிறது. RD கணக்குகளைத் தொடங்கி, நீங்கள் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம். இருப்பினும், RD இன் வட்டி விகிதம் குறித்து மக்கள் மனதில் பல கேள்விகள் உள்ளன. RD வட்டி பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகள் மற்றும் அவற்றின் பதில்களை விரிவாக இங்கே பார்க்கலாம்.

    கேள்வி: RD மீதான வட்டி விகிதம் என்ன?

    RD கணக்குக்கு விதிக்கப்படும் வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாறும். எனவே நீங்கள் ஒரு RD கணக்கைத் தொடங்கும்போது, சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை அல்லது இணையதளத்தில் வட்டியைப் பற்றிய தகவலைப் பெறலாம்.

    கேள்வி: RD கணக்கில் வட்டி எப்போது வரவு வைக்கப்படுகிறது?

    குறிப்பிட்ட சேமிப்புத் தேதியிலிருந்து மார்ச் 31 வரையில், நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு தவணையின் தொகையிலும் வட்டி கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு நிதியாண்டின் அடிப்படையிலும், மார்ச் 31 வரை ஒரு வருடம் நிறைவடைந்தவுடன் வட்டி வரவு வைக்கப்படும். அவ்வாறு இலாத பொது, உங்கள் மாதந்திர சேமிப்பின் முதிர்வு தேதி வரை (நிகர TDS பொருந்தினால்) மொத்த தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படும்.

    கேள்வி: RD வட்டி காலாண்டு, அரையாண்டு என்ற கால அளவின் அடிப்படையில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செலுத்தப்படுகிறதா?

    இல்லை. RD கணக்குக்கு வழங்கப்படும் வட்டி மற்றும் அசல் முதிர்ச்சியடைந்த பிறகு தான் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    கேள்வி: மூத்த குடிமக்கள் தொடர் வைப்புநிதிக்கு அதிக வட்டி பெறுகிறார்களா?

    ஆம். நீங்கள் ஒரு மூத்த இந்திய குடிமகனாக இருந்தால், RD இல் 0.5 சதவிகிதம் அதிக வட்டி விகிதத்தைப் பெறுவீர்கள். மேலும், மூத்த குடிமக்களுக்கு உரிய பிற நன்மைகளும், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன.

    கேள்வி: நாமினி அல்லது பயனாளி வசதி RDக்கு கிடைக்குமா?

    ஆம். நீங்கள் ரெக்கரிங் டெபாசிட் கணக்கைத் தொடங்கும்போது, உங்கள் குடும்பம் அல்லது உறவினர் ஒருவரை உங்களின் நாமினியாகக் குறிப்பிடலாம். RD சேமிப்பு முதிர்வடையும் முன்பு உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டிய தேதிக்கு முன்னரே பணத்தை எடுப்பதற்கு நாமினிக்கு உரிமை கிடைக்கும். அதே போல, நீங்கள் எந்த நேரத்திலும் நாமினி அல்லது பயனாளியின் பெயரை மாற்றுவதற்கான உரிமையும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கேள்வி: முதிர்வு தேதியில் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் RD தொகை நேரடியாக வரவு வைக்கப்படுமா?

    ஆம், முதிர்வு தேதியில் வட்டியுடன் கூடிய உங்கள் RD கணக்குத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இருப்பினும், அந்தத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால், நீங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.

    கேள்வி: தொடர் வைப்புநிதிக்கு TDS பிடித்தம் செய்யப்படுமா?

    ஆம். நிதி மசோதா 2015 இன் படி, ஜூன் 1, 2015 முதல் நிதியாண்டில் தொடர்ச்சியான வைப்புநிதியின் மீதான வட்டிக்கு TDS பொருந்தும். நீங்கள் வட்டியாக ஈட்டும் வருமானத்தின் அடிப்படையில் TDS பிடித்தம் செய்யப்படும்.

    கேள்வி: தொடர் வைப்புநிதி கணக்கைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச வைப்புத் தொகை என்ன?

    தொடர் வைப்பு கணக்கு தொடங்கும் போது, குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.500 செலுத்த வேண்டும். ஒரு சில வங்கிகள், குறைந்தபட்ச தொகையாக ரூ.100 செலுத்தியும் கூட RD கணக்கைத் தொடங்க அனுமதிக்கின்றன.

    கேள்வி: ரெக்கரிங் டெபாசிட் கணக்கு துவங்கிய 7 நாட்களுக்குள் மூடப்பட்டால் என்ன கட்டணம்?

    கணக்கு தொடங்கி 7 நாட்களுக்குள் மூடப்பட்டால் சேமிப்பிற்கு வட்டி கிடைக்காது. அதே போல, உங்கள் RD கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கு கட்டணம் ஏதும் விதிக்கப்படாது.

    கேள்வி: ஒரு நபர் சேமிக்கும் முன் RD கால்குலேட்டரைப் பயன்படுத்தலாமா?

    ஆம். RD கால்குலேட்டர் வசதி இப்போது கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் கிடைக்கிறது. RD கால்குலேட்டரின் உதவியுடன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட தொகையை சேமித்தால், முதிர்ச்சியின் போது எவ்வளவு பெறுவீர்கள் என்பதை மதிப்பிடலாம்.

    கேள்வி: RD கணக்கை எவ்வளவு காலத்துக்கு தொடங்கலாம்?

    பதில் - RD இல், உங்கள் விருப்பம் மற்றும் தேவைக்கு ஏற்றபடி குறுகிய, நடுத்தர அல்லது நீண்ட காலத்திற்கு சேமிக்க முடியும். பல வங்கிகள் பொதுவாக 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிப்பு விருப்பங்களை வழங்குகின்றன.

    கேள்வி: இன்டர்நெட் பேங்கிங் வசதி மூலம், இணையத்திலேயே RD கணக்கை தொடங்க முடியுமா?

    ஆம். இன்டர்நெட் பேங்கிங்கை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி ஏதேனும் பரிவர்த்தனை செய்திருந்தால், அதைக் கொண்டு RD கணக்கைத் தொடங்கலாம்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Post Office, Recurring Deposit

    அடுத்த செய்தி