முகப்பு /செய்தி /வணிகம் / சேமிப்பு கணக்கில் கடன் வாங்கினால் இனி இதுதான் நடக்கும்! புது அப்டேட்

சேமிப்பு கணக்கில் கடன் வாங்கினால் இனி இதுதான் நடக்கும்! புது அப்டேட்

போஸ்ட் ஆஃபீஸ் திட்டங்கள்

போஸ்ட் ஆஃபீஸ் திட்டங்கள்

இதை கவனத்தில் கொண்டு ரெக்கரிங் டெபாசிட் கணக்கின் மீது கடன் வாங்க திட்டமிடுங்கள்.

  • Last Updated :

அஞ்சல் சேமிப்பில் ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இந்த திட்டத்தில் வந்துள்ள புது அப்டேட் பற்றி தெரியுமா?

சிறந்த வருமானத்தை வழங்கக்கூடிய சேமிப்பு திட்டத்தில் ஒன்று தான் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் மிகக் குறைந்த பணத்தில் முதலீடு செய்ய தொடங்கி கைநிறைய லாபம் பார்க்கலாம்.உங்கள பணத்திற்கு இந்த திட்டத்தில் முழு பாதுகாப்பு உண்டு. மாதத்திற்கு ரூ.100 முதல் முதலீடு செய்ய தொடங்கலாம்.குறிப்பாக இந்த திட்டத்தில் அதிகபட்ச தொகைக்கு வரம்பு எதுவும் இல்லை.இந்த ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கான திட்டத்தில் தற்சமயம் 5.8% வட்டி வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லை கால வரம்பு ஆண்டுகள் அதிகம் இல்லை. வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே. அப்படியென்றால் 5 ஆண்டுகளில் உங்களின் மாத சேமிப்பைப் பொருத்து லாபம் பெறும், முதிர்வு தொகை அதிகரிக்கும்.

ஒவ்வொரு காலாண்டிலும் வைப்புத் தொகைக்கு வட்டி கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் கூட்டு வட்டியுடன் இது உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.சேமிப்புக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்றும் வசதியும் இதில் உள்ளது. ஒரு வருடம் கழித்து உங்களது டெபாசிட் தொகையில் 50 சதவீதம் வரையில் கடன் பெறும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது.கணக்கு தொடங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு நீங்கள் கடன் பெறலாம். அந்த கடனை மொத்தமாக அல்லது தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம்.

இப்போது இந்த கடன் வழங்கும் திட்டத்தில் தான் அஞ்சல் துறை புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது. அதாவது, ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் முதிர்வு பணம் வழங்கப்படும் நேரத்தில் பாக்கித் தொகை இனி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதிர்வுத் தொகையை வழங்கும்போது வாடிக்கையாளர் பெயரில் நிலுவையில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் கடன்கள் முழுவதும் செட்டில்மெண்ட் தொகையில் கழிக்கப்படும். திட்டத்தின் முதிர்வுக் காலம் வரை வாங்கிய கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், கடன் மற்றும் வட்டி முழுவதும் கணக்கிடப்பட்டு ரெக்கரிங் டெபாசிட் கணக்கின் முதிர்வுத் தொகையிலிருந்து கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இதை கவனத்தில் கொண்டு ரெக்கரிங் டெபாசிட் கணக்கின் மீது கடன் வாங்க திட்டமிடுங்கள்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Post Office