ஹோம் /நியூஸ் /வணிகம் /

இனியும் தாமதம் வேண்டாம்.. போஸ்ட் ஆபீஸில் இந்த கணக்கை உடனே ஓபன் செய்யுங்கள்!

இனியும் தாமதம் வேண்டாம்.. போஸ்ட் ஆபீஸில் இந்த கணக்கை உடனே ஓபன் செய்யுங்கள்!

போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக்

போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக்

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் 5 ஆண்டுகள் சேமிப்பு காலத்திலே முதலீடு தொகை நல்ல வட்டியை பெறுகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வங்கி முதலீடு நல்லது என்றாலும் லாபம் மற்றும் வருமானத்தை கருத்தில் கொண்டு பலரும் தற்போது போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். போஸ்ட் ஆபீஸில் முதலீடு திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள், பிக்சட் டெபாசிட் திட்டங்கள், பென்சன் திட்டங்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிடில் கிளாஸ் மக்கள் தொடங்கி அப்பர் கிளாஸ் வரை நீண்ட நாள் சேமிப்புக்கு நல்ல வழிகாட்டியாக இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் RD எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்கள்.

  இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் சேமிப்பு காலத்திலே முதலீடு தொகை நல்ல வட்டியை பெறுகிறது. அதனால் பலரின் தேர்வாகும் இந்த RD கணக்குகள் உள்ளன. இந்த திட்டத்துக்கு தற்போது 5.8% வட்டி வழங்கப்படுகிறது. மாதம் நீங்கள் செலுத்தும் தொகையை பொறுத்து முதிர்வு தொகை மாறுபடும். இப்போது நீங்கள் மாதம் ரூ. 7000 சேமித்தால் 5 ஆண்டுகளில் அதற்கு வட்டி சேர்த்து

  ரூ. 4,87,877 முதிர்வு தொகையாக உங்களுக்கு வழங்கப்படும். இதில் கூடுதல் அம்சம் என்னவென்றால் இதே திட்டத்தை 10 ஆண்டுகள் வரை உங்களால் நீட்டிக்க முடியும். அதிகபட்சமாக  10 ஆண்டுகள் வரை  மட்டுமே நீட்டிக்கலாம்.

  ALSO READ | கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை எங்கு கொடுக்க வேண்டும்? கொடுத்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?

  டெபாசிட் செய்வதை ஊக்குவிக்கம் வகையில் தபால் நிலையத்தில் முன்பண வைப்புநிதி அனுமதிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் பணமும் எடுக்கலாம். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு வருமான வரியில் விலக்கும் அளிக்கப்படுகிறது. இப்போது இந்த திட்டத்தில் ஆன்லைனில் எப்படி பணம் செலுத்துவது? என்ற தகவலையும் விரிவாக பார்க்கலாம்.

  முதலில் இந்திய போஸ் பேமெண்ட் வங்கியின் IPPB ஆப்பை மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த அக்கவுண்டில் பணம் இருக்கிறதா? என பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை இல்லை என்றால் வங்கி கணக்கில் இருந்து இந்த அக்கவுண்டுக்கு பணத்தை டிரான்ஸாக்‌ஷன் செய்து கொள்ள வேண்டும்.

  * பின்பு ஆப்பின் முகப்பு பக்கத்தில் இருக்கும் DOP Products என்பதற்கு சென்று Recurring Deposit என்பதை தேர்ந்தெடுக்கவும்

  * அதில் உங்களுடைய RD கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ID ஐ பதிவிடவும்.

  *  அதில் தோன்றும் installment duration மற்றும் தொகையை தேர்ந்தெடுக்கவும்

  *  அடுத்த சில நொடிகளில் IPPB mobile application மூலமாக payment transfer செய்தது வெற்றிகரமாக முடிந்தது என மெசேஜ் வரும்.RD முதலீட்டுக்கான மாதாந்திர தொகை ஆன்லைன் மூலமே கட்டப்பட்டு விட்டது.

  இந்த செயல்பாட்டின் முக்கிய் அம்சம், ஒருமுறை வங்கிக்கு சென்று கணக்கை தொடங்கி விட்டால் போது, அடுத்தடுத்த மாதம் ஆன்லைனிலே உங்களின் மாதாந்திர தொகையை கட்டிவிடலாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Post Office