Home /News /business /

கோடிகளில் வருமானம்.. உங்களுக்காகவே போஸ்ட் ஆபீஸ் தரும் மிகச் சிறந்த வாய்ப்பு!

கோடிகளில் வருமானம்.. உங்களுக்காகவே போஸ்ட் ஆபீஸ் தரும் மிகச் சிறந்த வாய்ப்பு!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

மொத்த வட்டி கிட்டத்தட்ட 66 லட்சமாக இருக்கும். 25 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்திருக்கும் மொத்தத் தொகை ரூ.37 லட்சமாக இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆபத்து இல்லாத அதே போன்று சிறு சேமிப்பாளர்களுக்கும் கைக்கொடுக்கும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் சரியாக முதலீடை தொடங்கினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகவும் வாய்ப்புண்டு. எப்படி தெரியுமா?

    அரசு திட்டமான இதில் சேமிப்புடன் சேர்த்து EEE அம்சத்துடன் பொதுமக்களுக்கு வரிகளைச் சேமிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் வரிச் சலுகைகளை அனுபவிக்க முடியும். தற்போது, ​​PPF திட்டம் ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது, மேலும் வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. வழிகாட்டுதலின்படி, முதலீட்டாளர்கள் தங்கள் பிபிஎஃப் கணக்கில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் வரை தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். இருப்பினும், ஒருவருக்கு 15 வருட முடிவில் பணம் தேவையில்லை என்றால், அவர் PPF கணக்கின் காலத்தை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளலாம். PPF கணக்கு நீட்டிப்பு படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் ஐந்து வருடத்திற்கு இதைச் செய்யலாம்.

    போஸ்ட் ஆபீஸ் VS எஸ்பிஐ..யோசித்து திட்டமிட்டால் ரூ. 7 லட்சம் உங்கள் கையில்!

    நல்ல வட்டி , குறைந்த ஆபத்து மற்றும் வரி இல்லாத தன்மை ஆகியவற்றுடன் கிடைக்கும் PPF திட்டத்தில் முதலீட்டாளர்கள் முறையாக முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் வரை சேமிப்பை உயர்த்தலாம். இதற்கு முதலீட்டாளர்கள் கீழே குறிப்பிட்டுள்ள முறையை பின்பற்ற வேண்டும்.

    உங்கள் PPF கணக்கில் ஒரு நாளைக்கு 417 ரூபாய் முதலீடு செய்தால், மாத முதலீட்டு மதிப்பு சுமார் 12,500 ரூபாய். அதாவது, ஒரு வருடத்திற்கு, உங்கள் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ரூ. 1,50,00 க்கும் சற்று அதிகமாக முதலீடு செய்கிறீர்கள், இது அதிகபட்ச வரம்பாகும். 15 ஆண்டுகளில், திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூ. 40.58 லட்சமாக இருக்கும், அதன்பிறகு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இரண்டு முறை பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும்.

    பெற்றோர்கள் கவனத்திற்கு.. போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளுக்காகவே செயல்படும் திட்டங்கள் பற்றி தெரியுமா?

    இதை 25 வயது முதல் 50 வயது வரை, அதாவது 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து செய்து வந்தால், முதிர்வு காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.1.03 கோடியாக இருக்கும். மொத்த வட்டி கிட்டத்தட்ட 66 லட்சமாக இருக்கும். 25 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்திருக்கும் மொத்தத் தொகை ரூ.37 லட்சமாக இருக்கும். இதனால் தான் ppf திட்டத்தில் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். இதில் மாதந்தோறும் வட்டி கணக்கிடப்படுவதால், ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Post Office, PPF, Savings

    அடுத்த செய்தி