ஹோம் /நியூஸ் /வணிகம் /

அடேங்கப்பா இந்த வசதியும் வந்தாச்சு.. இனி போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரச்சனையே இல்லை!

அடேங்கப்பா இந்த வசதியும் வந்தாச்சு.. இனி போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரச்சனையே இல்லை!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

தபால் அலுவலக சேமிப்பு வங்கி (POSB) திட்டங்களுக்கான ‘இ-பாஸ்புக் வசதி’ தொடங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு இனி உங்கள் பாஸ்புக்கை ஆன்லைனிலே செக் செய்யலாம். அதற்கான வசதி தற்போது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பலரின் கவனமும் போஸ்ட் ஆபீஸ் பக்கம் திரும்பியுள்ளது. சிறுசேமிப்பு தொடங்கி பிக்சட் டெபாசிட், பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். அதே போல் வங்கியை காட்டிலும் இங்கு அதிகம் வட்டி வழங்கப்படுவதும் ஒரு காரணம். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களின் கீழ் கணக்கு வைத்திருக்கும்

வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு பாஸ்புக்கை ஆன்லைனில் அணுகும் வசதியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இ-பாஸ்புக் வசதியை மத்திய அமைச்சர் தேவுசின் சவுகான் தொடங்கி வைத்துள்ளார்.

பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எல்.ஐ.சியில் இந்த பாலிசியை எடுப்பது அவ்வளவு நல்லது!

தபால் அலுவலக சேமிப்பு வங்கி (POSB) திட்டங்களுக்கான ‘இ-பாஸ்புக் வசதி’ தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இனிவரும் நாட்களில் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. POSB திட்டங்கள் டிஜிட்டல் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் பரிவர்த்தனை வரலாற்றைக கண்டறிய முடியும். இதற்காக போஸ்ட் ஆபீஸுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை.

இ-பாஸ்புக் முறை:

(1.) உங்கள் ஸ்மார்ட்போனில் தபால் அலுவலக செயலியை (POSB) திறந்து உள்நுழையவும்.

(2.) ‘மொபைல் பேங்கிங்’ என்பதற்குச் சென்று, கணக்குச் சான்றுகளை உள்ளிட்டு, ‘செல்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

(3.) உங்கள் கணக்கின் டாஷ்போர்டுக்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்; இங்கே, 'பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மெண்ட்' என்பதன் கீழ் உள்ள 'ஸ்டேட்மெண்ட்' என்பதைக் கிளிக் செய்யவும்.

(4.) இப்போது, ​​நீங்கள் 'கணக்கு அறிக்கை' மற்றும் 'மினி அறிக்கை' பார்ப்பீர்கள்.

(5.) நீங்கள் அறிக்கையைப் பார்க்க விரும்பும் காலத்தைத் தேர்வு செய்யவும்.

(6.) அதைப் பதிவிறக்கவும் செய்துக் கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: India post, Post Office, Savings