Home /News /business /

வாடிக்கையாளர்களுக்கு 6.7% வட்டி வழங்கும் அஞ்சல் நிலையம் - எந்த திட்டம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்?

வாடிக்கையாளர்களுக்கு 6.7% வட்டி வழங்கும் அஞ்சல் நிலையம் - எந்த திட்டம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்?

தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்கள்

தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்கள்

Post Office Deposit Scheme | தற்போது இருக்கும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் இந்தத் திட்டம், பாதுகாப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. டெபாசிட் செய்திருக்கும் காலத்தில் உங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட வருமானம் உண்டு.

நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கீழ் நல்ல வட்டி வழங்கி வருகின்றன. அதே சமயம், அதைவிட சற்று கூடுதலாக வட்டி பெறவும், வங்கி தவிர்த்து வேறு இடத்தில் முதலீடு செய்ய நீங்கள் விரும்பினாலும், அதற்கான வாய்ப்பை அஞ்சல் நிலையங்கள் தருகின்றன. அஞ்சல் நிலையத்தில் டெர்ம் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில் இணைந்து நீங்கள் 6.7 சதவீதம் வரை வட்டி பெற முடியும்.

தற்போது இருக்கும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் இந்தத் திட்டம், பாதுகாப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. டெபாசிட் செய்திருக்கும் காலத்தில் உங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட வருமானம் உண்டு. டெபாசிட் காலம் நிறைவடைந்தவுடன், உங்கள் கேபிடல் டெபாசிட் தொகை மற்றும் அதனுடன் இணைந்த வட்டி ஆகியவை உங்களுக்கு சேர்த்து வழங்கப்படும்.

வட்டி விகிதம் எவ்வளவு

மற்ற பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் நீங்கள் தேர்வு செய்வதைப் போல, ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை டெப்பாசிட் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை நீங்கள் டெபாசிட் செய்யும் போது உங்களுக்கு 5.50 சதவீத வட்டியும், 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யும்போது 6.7 சதவீத வட்டியும் அளிக்கப்படுகிறது.

திட்டத்தில் சேருவதற்கான தகுதி

நீங்கள் இந்திய குடியுரிமை கொண்ட, உள்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். உங்களிடம் அஞ்சல் நிலைய சேமிப்பு அக்கவுண்ட் இருந்தால் நல்லது. எந்தவொரு தலைமை அஞ்சல் அலுவலகம் அல்லது பொது அஞ்சல் அலுவலகத்தில் நீங்கள் அக்கவுண்ட் திறந்து கொள்ளலாம்.

post office scheme savings account indian post office account

டெபாசிட் தொகை அளவு

அக்கவுண்ட் தொடங்கும்போது குறைந்தபட்சம் ரூ.1,000 மற்றும் அதனுடன் ரூ.100 பெருக்கல் முறையில் நீங்கள் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச டெபாசிட் வரம்பு கிடையாது. ஓராண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும். நீங்கள் உங்கள் வட்டியை எடுத்துக் கொள்ளாவிட்டால், அந்தத் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்பட மாட்டாது. வருடாந்திர வட்டி தொகை, அக்கவுண்ட் வைத்திருப்பவரின் சேமிப்பு அக்கவுண்டில் கிரெடிட் செய்யப்படும்.

Also Read : தபால் அலுவலகத்தில் டைம் டெபாசிட் கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி?

முன்கூட்டியே முடித்துக் கொள்ள முடியுமா

நீங்கள் அக்கவுண்ட் ஓபன் செய்த நாளில் இருந்து 6 மாதங்களுக்கு உங்கள் பணத்தை நீங்கள் திரும்ப பெற முடியாது. 2 அல்லது 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்து விட்டு, அது நிறைவடையும் முன்பாக, 1 அல்லது 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் பணத்தை நீங்கள் திரும்ப பெற்றால், நிறைவுபெற்ற ஆண்டு வட்டியில் 2 சதவீதம் கழித்துக் கொள்ளப்படும். 2 அல்லது 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்து விட்டு, அது நிறைவடையும் முன்பாக, 1 அல்லது 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் பணத்தை நீங்கள் திரும்ப பெற்றால், நிறைவுபெற்ற ஆண்டு வட்டியில் 2 சதவீதம் கழித்துக் கொள்ளப்படும்.
Published by:Selvi M
First published:

Tags: Fixed Deposit, Interest rate, Post Office

அடுத்த செய்தி