Home /News /business /

வட்டி மட்டுமே ரூ1.94 லட்சம்.. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் அட்டகாசமான திட்டம்!

வட்டி மட்டுமே ரூ1.94 லட்சம்.. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் அட்டகாசமான திட்டம்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் இந்தக் கணக்கீட்டின்படி, திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு காலத்தில் ரூ.6,94,746 ஆக இருக்கும்.

    கொரோனாவுக்கு பிறகு முதலீடுகளில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சந்தைகளும் பொருளாதாரங்களும் ஒப்பீட்டளவில் நிலையற்றவையாகவே இருக்கின்றன. இந்த சூழ்நிலை பரஸ்பர நிதிகள் மற்றும் திட்டங்கள் மூலம் முதலீட்டு விருப்பங்களில் மக்களின் எண்ணம் செல்கிறது. இவை குறைந்த ஆபத்து மற்றும் அதே நேரத்தில் சிறந்த வருமானத்தை வழங்குகின்றன. அந்த வகையில் மத்திய அரசின் கீழ் செயல்பாடும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள். ஆகச் சிறந்த சேமிப்பு திட்டங்களாக பார்க்கப்படுகின்றன.

    ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சேர்த்து நல்ல வருமானத்தை ஈட்டக்கூடிய பல திட்டங்களை அஞ்சல் சேமிப்பு கொண்டுள்ளது. 5 ஆண்டுகளில் நல்ல வருமானத்தை வழங்கும் அஞ்சல் அலுவலகத்தின் குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு விருப்பங்களில் ஒன்று தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டமாகும்.NSC திட்டம் பல காரணங்களால் முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீட்டின் உச்ச வரம்பு இல்லை. மேலும், ஒரு நபர் ஒரே நேரத்தில் திட்டத்திற்காக பல கணக்குகளை திறக்க முடியும். அது மட்டுமல்லாமல், என்எஸ்சி டெபாசிட்டுகள் வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கின்றன.

    கிரெடிட் கார்டு பில் அதிகமாக வருகிறதா? இனி இந்த தப்பை செய்யாதீர்கள்!

    NSC திட்டம் தற்போது 6.8 சதவீத வட்டி விகிதத்துடன் வழங்கப்படுகிறது. இந்த அஞ்சல் அலுவலகத் திட்டத்தின் விதிகளின்படி, வட்டி ஆண்டு அடிப்படையில் கூட்டப்படுகிறது. முதிர்வு காலம் முடிந்த பிறகு, அதாவது ஐந்து வருடங்கள் கழித்து இது செலுத்தப்படும். NSC திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தின்படி, ரூ.1000 முதலீடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1389.49 ஆக வளரும்.

    EPFO : உங்கள் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் கிடைக்க இதை செய்தாலே போதும்!

    இந்தக் கணக்கீட்டின்படி, திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு காலத்தில் ரூ.6,94,746 ஆக இருக்கும். அதாவது, தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டமானது 5 வருட காலப்பகுதியில் உங்களுக்கு ரூ.1,94,746 லட்சத்தை வட்டியை வருமானமாக தருகிறது. தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ் அஞ்சல் அலுவலகத்தில் கணக்கைத் தொடங்க ஆர்வமுள்ள நபர்கள் அருகிலுள்ள கிளைக்குச் சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.என்எஸ்சியின் கீழ், கூட்டுக் கணக்குகளையும் திறக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெயரில் கணக்கு தொடங்கலாம். மைனர் சார்பாகவோ அல்லது மனநிலை சரியில்லாதவர் சார்பாகவோ ஒரு பாதுகாவலரால் கணக்கைத் திறக்க முடியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pension Plan, Post Office, Savings

    அடுத்த செய்தி