போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பல்வேறு தேவைகளுக்காக அடிக்கடி போஸ்ட் ஆபீஸூக்கு செல்ல முடியவில்லை என கவலை கொள்கிறீர்களா? கவலை வேண்டாம் அதுக்கும் ஒரு வழி இருக்கு. அதைப்பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
சேமிப்பு கணக்கு அல்லது நிலையான வைப்பு கணக்குக்கு அதிக வட்டி பெற நீங்கள் விரும்பினால்,அதற்கு போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு மிகச் சிறந்த தேர்வாகும். அதிலும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 9 சிறுசேமிப்பு கணக்குகள் பலரின் கவனத்தை பெற்ற சேமிப்பாக இருந்து வருகிறது. இவை அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன.இந்த போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகள் இணைய வசதிகளையும் வழங்குகிறது, இதைப் பயன்படுத்தி நீங்கள் பணப் பரிவர்த்தணை மட்டும் தான் செய்ய முடியும் என நினைத்துவிட வேண்டாம் முதலீடும் செய்யலாம்.
போஸ்ட் ஆபீஸ் நெட் பேக்கிங் வசதி பெறுவது எப்படி?
KYC ஆவணங்கள்
மொபைல் எண்
மின்னஞ்சல் முகவரி
பான் எண்
இந்த
ஆவணங்கள் கட்டாயம் தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.பேங்கிங் வசதியைப் பெற, ஒருவர் தபால் அலுவலக கிளைக்கு ஒரு முறை சென்று, நிரப்பப்பட்ட தபால் அலுவலக Internet Banking படிவத்தை, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். தபால் அலுவலக இணைய வங்கி செயல்படுத்தப்பட்ட பிறகு மொபைலில் எஸ்எம்எஸ் அலெர்ட் பெறுவீர்கள்.
இதையும் படிங்க.. வருமான வரி கணக்கு சரிபார்க்க பிப்.28ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!
பின்பு நெட் பேக்கிங்கை பயன்படுத்த, https://ebanking.indiapost.gov.in தளத்தை பார்வையிட வேண்டும், பின்னர் ‘புதிய பயனர் செயல்படுத்தல்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இங்கே, நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கு பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்ட CIF ஐடியான வாடிக்கையாளர் ஐடியாக பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும். இவை எல்லாவற்றையும் சரியாக செய்து முடித்த பின்பு உங்களது போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கின் நெட் பேக்கிங் வசதி செயல்பாடுக்கு வந்து விடும். இப்போது நீங்கள் பணப் பரிமாற்றம் செய்யலாம்
இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வரும் முக்கிய மாற்றம் இதுதான்.. மறக்காம நோட் பண்ணிக்கோங்க!
தபால்
அலுவலக கிளைக்குச் செல்லாமல், உங்கள் பிபிஎஃப் கணக்கிலோ அல்லது தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்புத்தொகை (ஆர்.டி) கணக்கிலோ பணத்தை டெபாசிட் செய்யலாம். நீங்கள் ஆர்.டி அல்லது டைம் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பினாலோ, அவற்றை மூடவும் நினைத்தாலும் கூட நீங்கள் நெட் பேக்கிங் மூலம் செய்து முடிக்கலாம். இன்டர்நெட் பேங்கிங்கை நீங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை என்றால், அதையும் செயல்படுத்தலாம். இதற்கு, நீங்கள் செல்லுபடியாகும், செயலில் உள்ள, தனிநபர் கணக்கு அல்லது கூட்டு சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.