• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ரிட்டயர்மென்ட் பணம் ரூ.1 லட்சம் உங்கள் கையில் இருந்தால் இதை உடனே செய்திடுங்கள்!

ரிட்டயர்மென்ட் பணம் ரூ.1 லட்சம் உங்கள் கையில் இருந்தால் இதை உடனே செய்திடுங்கள்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

அதிகபட்சமாக 9 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 6.6 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

  • Share this:
    மாதம் பென்சன் பெற வேண்டுமா? அப்ப மாதாந்திர வருவாய் திட்டம் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 4.5லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யுங்கள்.

    முதுமையைப் பற்றிய பயம்அனைவருக்கும் இருக்கும். ஆனால் இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். உங்கள் ஓய்வு காலத்தில், யாரையும் சாராமல் இருக்க, மாதந்தோறும் பென்ஷன் உங்கள் வீடு தேடி வர ஒரு நல்ல அரசு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் உழைத்து சம்பாதித்து வைத்திருக்கும் ரிட்டயர்மெண்ட் பணத்தை எந்த திட்டத்தில் போட்டால் மாதம் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வருவாயை அதிகரிக்க மிகச் சிறந்த இடம் அஞ்சலக சேமிப்பு. .நல்ல லாபம், பணத்திற்கு உறுதியான பாதுகாப்பு கிடைக்கிறது.

    ஒருவர் மாதாந்திர வருவாய் திட்டம் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 4.5லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கூட்டு அஞ்சலக கணக்கு என்றால் அதிகபட்சமாக 9 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அஞ்சலக மாத வருவாய் திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6 சதவீதம்.18 வயது நிரம்பியவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க முடியும். இதுவே கூட்டு கணக்கு என்றால் அதிகபட்சமாக மூன்று பேர் வரை இணைந்து கணக்கு தொடங்கலாம்.ரூ.4.5 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம் ஆண்டிற்கு ரூ.29,700 வட்டியாக பெற முடியும். இதுவே கூட்டு கணக்கு என்றால் வட்டி மாறும். இதை நீங்கள் மாதாந்திர வருமானமாக கணக்கிடும்போது நீங்கள் செய்த முதலீடுக்கு மாதந்தோறும் ரூ.4,950 மாத வருமானம் கிடைக்கும்.இதை மாத மாதமும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 550 ரூபாய் பென்சனாக கிடைக்கும். ஆண்டுக்கு 6600 ரூபாய் பென்சன் கிடைக்கும். 5 ஆண்டுகளில் 33000 ரூபாய் கிடைக்கும்.

    அடுத்தது, அஞ்சலகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS ) இது அரசின் திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளர்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான். அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது.

    வட்டி மட்டுமே ரூ. 5 லட்சம் கிடைக்கும்... டைம் வேஸ்ட் பண்ணாமல் முதலீட்டை தொடங்குங்கள்!

    காலாண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது.தற்போது வட்டி 7.40%. இந்த திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். மூத்த குடி மக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வரி சலுகைகளும் உண்டு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: