அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்பு அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் பணப் பரிவர்த்தனை சேவைகளை இந்திய அஞ்சல் துறை வழங்கியுள்ளது. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் இனி மின்னணு பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும்.
இதுகுறித்து மத்திய நேரடி வரி விதிப்புகள் வாரியம் கடந்த மே 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு 2022ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியில் இருந்து நெஃப்ட் வசதி கிடைக்கப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, மே 31ஆம் தேதியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு
ஆர்டிஜிஎஸ் வசதி கிடைக்க இருக்கிறது.
இதையும் படிங்க.. SBI update : இந்த தேதிகளில் வங்கிச் சேவை பாதிக்கப்படலாம்.. ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க!
வாடிக்கையாளர்கள் இனி இலகுவாக தங்கள் வங்கி அக்கவுண்டுகளில் இருந்து அஞ்சல் நிலைய அக்கவுண்டுகளுக்கு பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், “அஞ்சல் நிலைய அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான நெஃப்ட் அல்லது ஆர்டிஜிஎஸ் வசதி என்பது வருகின்ற மே 31ஆம் தேதி முதல் செயல்பட இருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இதில் நெஃப்ட் வசதி முன்கூட்டியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை வசதி இறுதிகட்ட பரிசோதனையில் இருக்கிறது என்றும், மே 31ஆம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் என்றால் என்ன?
ஆர்டிஜிஎஸ் என்றால் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் மற்றும் நெஃப்ட் என்றால் நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் ஃபண்ட் டிரான்ஸபர் என்பதாகும். இந்த இரு சேவைகளும் ஆண்டின் அனைத்து நாட்களிலும் செயல்பாட்டில் இருக்கும். வங்கி விடுமுறை அல்லது அஞ்சல் நிலைய விடுமுறை நாட்களிலும் கூட இந்த சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
இரண்டு சேவைகளுமே எலெக்ட்ரானிக் மணி டிரான்ஸ்பர் சேவைகள் தான். நெஃப்ட் சேவைகள் அனைத்தும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு வரவு வைக்கப்படும். ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை என்பது உடனுக்குடன் வரவு வைக்கப்படும்.
இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் இந்த சேமிப்பை தொடங்கினால் மாதம் ரூ. 5000 கிடைக்கும்! முழு விபரம்
நெஃப்ட் சேவை கட்டணம் :
வாடிக்கையாளர்கள் ரூ.10,000 வரை
பரிவர்த்தனை செய்யும்போது ரூ.2.50 சேவைக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 மற்றும் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படும். ரூ.1 லட்சத்திற்கு மேல் 2 லட்சத்திற்குள் உள்ள பரிவர்த்தனைக்கு ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி வரி, ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.25 மற்றும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படும்.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச பரிவர்த்தனை வரம்பு :
நெஃப்ட் பரிவர்த்தனையில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரையில் செய்து கொள்ள முடியும். இ-பேங்கிங் மற்றும் எம்-பேங்கிங் மூலமாக ரூ.2 லட்சம் வரையில் அனுப்பிக் கொள்ளலாம். நாளொன்றுக்கு 5 பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.
புகார் பதிவு செய்ய...
நெஃப்ட் பரிவர்த்தனை தொடர்பான உங்கள் புகாரை பதிவு செய்ய இந்திய அஞ்சல் துறையின் வாடிக்கையாளர் சேவை மைய எண் 1800 2666 868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.