• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சேவிங்க்ஸ் என்றால் இப்படி இருக்கணும்.. மாதம் ரூ. 3000 சேமித்தால் ரூ.14 லட்சம் கிடைக்குமாம்!

சேவிங்க்ஸ் என்றால் இப்படி இருக்கணும்.. மாதம் ரூ. 3000 சேமித்தால் ரூ.14 லட்சம் கிடைக்குமாம்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

மீதமுள்ள 40% பணம் முதிர்வு காலத்தில் போனஸுடன் வழங்கப்படும்.

  • Share this:
    உங்கள் பணத்திற்கு முழு உத்தரவாதம் அளிக்கும் இந்த கிராம சுமங்கல் யோஜனா திட்டம். மாதம் ரூ. 3000 சேமித்தால் ரூ. 14 லட்சம் லாபம் பார்க்க முடியும்.

    இந்த திட்டத்தில் 2 வகைகள் உள்ளன. 15 ஆண்டு கால திட்டம் மற்றும் 20 ஆண்டு கால திட்டம். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.இந்த இந்த திட்டத்தில் இணைவதற்கு குறைந்தபட்சம் 19 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்த திட்டத்தில், 15 ஆண்டு கால சேவிங்ஸில் 6, 9 மற்றும் 12 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 20-20% பணம் திரும்பக் கிடைக்கும். இதில் மீதமுள்ள 40% பணம் போனஸ் உடன் மொத்தமாக திட்டம் முடிவடைந்த பின்பு கொடுக்கப்படும். அதேபோல, 20 ஆண்டு கால சேவிங்ஸில் 8, 12 மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 20-20 சதவிகிதம் பணம் கிடைக்கும். மீதமுள்ள 40% பணம் முதிர்வு காலத்தில் போனஸுடன் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் 15 ஆண்டு கால சேவிங்ஸில் சேர அதிகப்பட்ச வயது 45. 20 ஆண்டு கால சேவிங்ஸை தேர்ந்தெடுத்தால் அதிகப்பட்ச வயது 40. இதில் காலாண்டு பிரீமியம் ரூ .8,449 ஆகவும், அரையாண்டு பிரீமியம் ரூ .16,715 ஆகவும், ஆண்டு பிரீமியம் ரூ .32,735 ஆகும்.இந்த திட்டம் 20 ஆண்டுகளில் மொத்தம் ரூ .13.72 லட்சம் தொகையை வழங்குகிறது. இதில், 4.2 லட்சம் விதிமுறைகளின் படி முன்பே வழங்கப்பட்டுவிடும் மற்றும் முதிர்வு காலத்தில் ரூ. 9.52 லட்சம் ஒன்றாக வழங்கப்படும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் தினமும் ரூ. 95 சேமித்தால், (மாதத்திற்கு ரூ. 2850, மாதத்திற்கு 31 நாட்கள் என்றால் ரூ. 2945) என முதலீடு செய்தால் போதும் 20 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் ரூ. 14 லட்சம் இருக்கும்.

    கிராம சுமங்கல் யோஜனா திட்டம் பற்றிய விவரம்:

    இந்த கிராம சுமங்கல் யோஜனா திட்டம் 1995 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ .95 முதலீடு செய்தால், திட்டத்தின் முடிவில் நீங்கள் ரூ .14 லட்சத்தைப் பெறலாம். அதே போல் இந்தத் திட்டத்தின் கீழ், தபால் அலுவலகம் 6 வெவ்வேறு காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது.இந்த திட்டமானது

    பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக 5 வருடத்தில் 7 லட்சம் சேர்க்கலாம்! அதற்கு செய்ய வேண்டியது இதுமட்டும் தான்!

    அவ்வப்போது பணம் தேவை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் ரூ. 10 லட்சம் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு திரும்ப வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தொடர்ந்த நபர் ஒருவேளை இறந்தால், அவரின் நாமினிக்கு மீதி காப்பீட்டுத் தொகை மற்றும் போனஸ் தொகை சேர்த்து வழங்கப்படும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: