முகப்பு /செய்தி /வணிகம் / நிலையான வருமானம்...5 வருஷம் கழிச்சு ரூ. 20 லட்சம் கிடைக்க இந்த சேமிப்பை தேர்ந்தெடுங்கள்!

நிலையான வருமானம்...5 வருஷம் கழிச்சு ரூ. 20 லட்சம் கிடைக்க இந்த சேமிப்பை தேர்ந்தெடுங்கள்!

கட்டணம் இல்லை

கட்டணம் இல்லை

ரூ .100 முதலீடு செய்ய வேண்டும். இது குறைந்தபட்ச முதலீடு ஆகும்

  • Last Updated :

post office money savings: 5 வருடத்தில் கிட்டதட்ட 5 லட்சம் வட்டியாக பெற்று வருவாயை உயர்த்தும் மிகச் சிறந்த திட்டம் அஞ்சலக சேமிப்பில் உள்ளது உங்களுக்கு தெரியுமா?

காலம் முழுவதும் உழைக்க வேண்டும் என்ற எந்தவித அவசியமும் இல்லை. ஸ்மார்ட்டாக சேவிங்ஸ் செய்தாலே போதும் நல்ல வருவாய் பார்க்கலாம் தெரியுமா? பாதுகாப்பு மற்றும் நல்ல வருமானம், இவை இரண்டும் தான் எப்போதுமே நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. அப்படி ஒரு திட்டம் குறித்து தான் இங்கு பார்க்க போறோம்.

அஞ்சலகத்தில் இருக்கும் தேசிய சேமிப்பு சான்று National Saving Certificate (NSC) திட்டம் பல்வேறு முன்னணி வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கான வட்டிகளைக் காட்டிலும் கூடுதல் வட்டியை வழங்குகிறது இந்த திட்டம் மூலம் என்எஸ்சியில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் ஆண்டுதோறும் நல்ல லாபத்தில் வட்டி பெறலாம்.

also read ரூ.1000 முதலீடு உங்களை லட்சாதிபதி ஆக்கும்.. நீங்கள் செல்ல வேண்டிய இடம் இதுதான்!

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். நீங்கள் விரும்பினால், முதிர்வுக்குப் பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு உங்கள் முதலீட்டை அதிகரிக்கலாம். குறைந்தது ரூ .100 முதல் முதலீடு செய்யலாம் அதிகபட்ச வரம்பு என்று எதுவும் இல்லை.

top videos

    இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் முதலீடுகளுக்கு வரி விலக்கு பெற முடியும். அவர்களின் முதலீடு தொகையை பொறுத்து முதிர்வு கால தொகை மாறுபடுகிறது. நீங்கள் ரூ. 15 லட்சம் முதலீடு செய்கிறார் என்றால், 5 வருடத்தில் ரூ. 20.85 லட்சமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதாவது ஐந்து வருடத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் வரை வட்டி மட்டுமே பெறுவீர்கள். கூடுதல் விவரங்களுக்கு ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் சென்றும் விசாரிக்கலாம்.

    First published:

    Tags: Post Office