Home /News /business /

வெறும் 5 ஆண்டுகளில் 14 லட்சத்தை திரட்ட போஸ்ட் ஆபீஸ் வழங்கும் வாய்ப்பு!

வெறும் 5 ஆண்டுகளில் 14 லட்சத்தை திரட்ட போஸ்ட் ஆபீஸ் வழங்கும் வாய்ப்பு!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

சேமிப்பு கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு மேல்  டெபாசிட் செய்ய முடியாது. 5 ஆண்டுகள் இந்த திட்டத்தின் முதிர்வு காலமாக உள்ளது. 

    போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மிகச் சிறந்த லாபகரமான திட்டம் குறித்து பார்க்க போகிறோம். இதில் நீங்கள் 5 ஆண்டுகளில் 14 லட்சம் என்ற மிகப் பெரிய தொகையை சேமிக்க முடியும். விரிவான தகவல்கள் இதோ

    அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் அதிகமான லாபம்,வட்டி கிடைக்கும் ஒரே திட்டம்  மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்.  இந்த SCSS சேமிப்பு திட்டத்தில் தற்சமயம் 7.4%  வட்டி வழங்கப்படுகிறது. இந்த சேமிப்பை கணக்கை தொடங்க குறைந்தபட்சத் தொகை ரூ 1000 ஆகும்.

    அதே போல் இந்த சேமிப்பு கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு மேல்  டெபாசிட் செய்ய முடியாது. 5 ஆண்டுகள் இந்த திட்டத்தின் முதிர்வு காலமாக உள்ளது. முதலீட்டாளர் விரும்பினால் இந்த கால வரம்பை மேலும் நீட்டித்து கொள்ளும் வாய்ப்பு இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதாவது, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இப்போது இந்த 5 ஆண்டுகள் திட்டத்தில் 14 லட்சம் வரை எப்படி திரட்ட முடியும் என்பதை பார்க்கலாம்.

    இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தெரியாமல் கூட இந்த தப்பை செய்து விடாதீர்கள்!

    அதற்கு இந்த திட்டத்தில் மொத்தமாக 10 லட்சம் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். ரிட்டர்மெண்ட் பணத்தை கையில் வைத்திருப்பவர்கள், ஏதாவது ஒரு முதலீட்டை தொடங்க வேண்டும் என கையில் பணத்துடன் இருப்பவர்கள்,  தொழிலபதிபர்களுக்கு இந்த திட்டம் மிகச் சிறந்த தேர்வாகும். ரூ.10 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால், ஆண்டுக்கு 7.4% வட்டியில் மொத்தத் தொகை ரூ.14,28,964 ஆக திரும்ப கிடைக்கும் அதாவது இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் நீங்கள் பெறும் வட்டி ரூ. 4,28,964. பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது.

    இதையும் படிங்க.. Fixed Deposit: பணத்தை போடுவதற்கு முன்பு இதை செய்ய மறவாதீர்கள்!

    தேவையான தகுதிகள்: 

    மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கை திறக்க
    நீங்கள் ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.இந்த  கணக்கை தொடங்க 60 வயது  நிரம்பியவராக இருக்க வேண்டும்.  60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் இந்த  கணக்கை  தொடங்க முடியும். இது தவிர, Voluntary Retirement Scheme எடுத்தவர்களும், இந்தத் திட்டத்தில் கணக்குத் தொடங்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Post Office, Savings

    அடுத்த செய்தி