Home /News /business /

போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் தொடங்க வேண்டுமா? உங்கள் கையில் இவ்வளவு தொகை இருந்தால் போதும்!

போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் தொடங்க வேண்டுமா? உங்கள் கையில் இவ்வளவு தொகை இருந்தால் போதும்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

post office : போஸ்ட் ஆபீஸில் இருக்கும் சேமிப்பு திட்டங்களின் குறைந்த பட்ச இருப்பு தொகை எவ்வளவு என்ற விவரத்தை பார்க்கலாம்.

    உங்களுக்கு post officeல்  ஒரு சேமிப்பு திட்டம் இருந்தாலும் சரி, அல்லது இனிமேல் தான் தொடங்க போவதாக இருந்தாலும் சரி இந்த பதிவு கட்டாயம் உதவும். காரணம், போஸ்ட் ஆபீஸில் சேமிப்பை தொடங்க, உங்கள் கையில் இருக்க வேண்டிய தொகை எவ்வளவு? என்ற விவரத்தை பார்க்க போகிறோம். அதே நேரம், ஏற்கெனவே சேமிப்பு திட்டத்தை தொடங்கியவர்கள் அதன் இருப்பு தொகைக்கு மேல் எவ்வளவு தொகையை அதிகமாக செலுத்தி சேமிப்பு கணக்கை செய்ல்படுத்தி வருகிறார்கள் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    போஸ்ட் ஆபீஸில் இருக்கும் திட்டங்கள் குறித்தும், அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றியும் இதுவரை பல பதிவுகளில் பார்த்து இருக்கிறோம். போஸ்ட் ஆபீஸில் இருக்கும் 9 வகையான சிறு சேமிப்பு திட்டங்கள் பலவிதமான சலுகைகளை லாபத்தை வாரி வழங்கி வருகிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த சிறு சேமிப்பு திட்டங்கள் மிடில் கிளாஸ் முதல் அப்பர் கிளாஸ் வரை பலரின் தேவைகளை பூர்த்தி செய்யும் முதலீடு திட்டமாக இருந்து வருகிறது. இப்போது இந்த பதிவில் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் சேமிப்பு திட்டங்களின் குறைந்த பட்ச இருப்பு தொகை எவ்வளவு என்ற விவரத்தை பார்க்கலாம்.

    இதையும் படிங்க.. Paytm மூலம் ரூ.60,000 வரை கடன் பெறுவது எப்படி? இன்றே தெரிந்து கொள்ளுங்கள்!

    போஸ்ட் ஆபீஸில் வழக்கமான சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும், வங்கிகளில் அக்கவுண்ட் இருப்பது போல் போஸ்ட் ஆபிஸிலும் அக்கவுண்ட் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் கையில் ரூ. 500 இருந்தாலே போதும். நீங்கள் தேவையான ஆவனங்களை எடுத்து கொண்டு போஸ்ட் ஆபீஸ் சென்று ரூ. 500 செலுத்தி வழக்கமான சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இதை ஆன்லைனிலும் செய்ய முடியும்.

    அடுத்தது, தேசிய சேமிப்பு தொடர் வைப்பு நிதி திட்டம். இந்த சேமிப்பை தொடங்க ரூ.100 இருந்தால் போதும். போஸ்ட் ஆபீஸில் மாதம் மாதம் வருவாய் கிடைக்கும் திட்டம் மாதாந்திர வருமான திட்டம் . இந்த திட்டத்திற்கான குறைந்த பட்ச இருப்பு தொகை ரூ.1000.  அதே போல் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ரூ.500 செலுத்தி கணக்கை தொடங்கலாம்.

    இதையும் படிங்க.. மார்ச் 31 க்குள் ஒவ்வொரு இந்திய குடிமக்களும் இதை செய்து இருக்க வேண்டும்.. இல்லையெனில் அபராதம்!

    பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மினிமம் பேலன்ஸ் ரூ.250 ஆகும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் சேர ரூ.1000 இருந்தால் போதும். அடுத்தது, தேசிய சேமிப்பு பத்திரத்திட்டம். இதில் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். கடைசியாக கிசான் விகாஸ் பத்திரம். இதில் ரூ.1000 இருந்தாலே போதும் கணக்கை தொடங்க முடியும்.

    மேற்கண்ட திட்டங்களில் வழங்கப்படும் வட்டி குறித்த விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: India post, Post Office, Savings

    அடுத்த செய்தி