ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்த 5 விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பை தொடங்காதீர்கள்!

இந்த 5 விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பை தொடங்காதீர்கள்!

போஸ்ட் ஆபிஸ்

போஸ்ட் ஆபிஸ்

போஸ்ட் ஆபீஸ் கணக்கில் குறைந்தபட்ச தொகை பராமரிக்கவில்லை என்றால் ரூ. 50 கட்டணம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  போஸ்ட் ஆபீஸ் சேமிப்பை தொடங்குவதற்கு முன்பு கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

  சேமிப்பு திட்டத்தின் வட்டி:

  சமீபத்தில் மத்திய அரசு அக்டோபர்-டிசம்பர் 2022 காலாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 30 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது. தபால் அலுவலக சேமிப்பு கணக்கு போன்ற மற்ற திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தவில்லை. தற்போது, ​​அஞ்சலக சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம் தனிநபர் அல்லது கூட்டுக் கணக்குகளுக்கு 4% ஆண்டு வட்டி விகிதம்.

  இவ்வளவு சலுகைகளா..! - புத்தம் புதிய பாலிசியை சந்தையில் இறக்கிய எல்.ஐ.சி

  விதிமுறைகள்:

  காசோலை புத்தகத்துடன் கூடிய சேமிப்புக் கணக்குகளுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ. 500 ஆகும். கணக்கைத் திறக்கும்போது பரிந்துரை செய்வது கட்டாயமாகும். தனிநபர் கணக்கை கூட்டு கணக்காக மாற்றுவது அல்லது அதற்கு நேர்மாறாக மாற்றுவது அனுமதிக்கப்படாது

  வரிவிலக்கு:

  ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.10,000 வரையிலான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் நிதி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கணக்கிற்கு வட்டி வழங்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80TTA ன் படி, அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளுக்கும் ரூ. ஒரு நிதியாண்டில் 10,000 ரூபாய்க்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, கணக்கு மூடப்படும் முந்தைய மாதம் வரை செலுத்தப்படும்.

  குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கில் சலுகைகளை வாரி வழங்கும் 2 வங்கிகள்..!

  கட்டணத்தொகை:

  கணக்கில் குறைந்தபட்ச தொகை பராமரிக்கவில்லை என்றால் ரூ. 50 கட்டணம். கணக்கு பராமரிப்பு கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படும். நிதியாண்டின் முடிவில், கணக்கு இருப்பு பூஜ்யமாக இருந்தால் உடனடியாக கணக்கு மூடப்படும்.

  வட்டி செலுத்துதல்:

  10வது மற்றும் மாத இறுதிக்கு இடையே உள்ள குறைந்தபட்ச இருப்பு தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். மாதத்தின் 10-ம் தேதிக்கும் கடைசி நாளுக்கும் இடையே கணக்கு இருப்பு தொகைக்கு குறைவாக இருந்தால் அந்த மாதத்திற்கு வட்டி வழங்கப்படாது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: India post, Post Office, Savings