போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் மட்டுமில்லை எந்த மாதிரியான அக்கவுண்ட் வைத்திருந்தாலும் சரி இந்த முக்கியமான விஷயம் உங்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்கணும். என்னது அது? வாங்க பார்க்கலாம்.
சமீப காலமாக வங்கியை காட்டிலும் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்குகள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம், வங்கிகளில் சேமிப்பு கணக்கு, எஃப்டி திட்டங்களுக்கு தரும் வட்டியை விட போஸ்ட் ஆபீஸில் நல்ல வட்டி மற்றும் லாபம் கிடைப்பது தான். தனி நபர் சேமிப்பு கணக்கு மட்டுமில்லை போஸ்ட் ஆபீஸில் ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்குவதும் நல்ல தேர்வு தான். ஏனெனில் வரிச்சலுகையும் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் 4 சதவீத வட்டி லாபம் பெறலாம்.
இந்த கணக்கை ஆன்லைனில் தொடங்க முடியும். நேராக சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் அக்கவுண்டை ஓபன் செய்து சேமிப்பை தொடங்கலாம். இதற்கு ஆதார் உள்ளிட்ட கேஒய்சி ஆவணங்கள் சரிபார்ப்பு செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கில்
வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் மினிமம் பேலன்ஸ் விவரங்கள் சரிபார்ப்பு செய்யப்படும். அந்த சமயத்தில் மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதமும் விதிக்கப்படும். இதை தவிர மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறு சேமிப்பு திட்டங்களை தொடங்கி பணத்தை சேமிப்பவர்களும் இந்த முக்கியமான தகவலை தெரிந்து கொள்வது நல்லது.
இதையும் படிங்க.. LIC pension: இனி நீங்களும் ஓய்வு காலத்தில் ரூ. 12,000 வரை பென்சன் வாங்கலாம்! எல்.ஐ.சி தரும் வாய்ப்பு
அந்த வகையில்
போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்கள் சேவையை மேம்படுத்த சமீபத்தில் IVR வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தப்படியே மொபைல் மூலம் சில முக்கியமான தகவல்களைப் பெற அனுமதிக்கிறது.
பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா, என்எஸ்சி மற்றும் பிற சிறுசேமிப்புகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், முதலீட்டில் பெறப்பட்ட வட்டி, ஏடிஎம் கார்டு பிளாக், புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்குதல் போன்ற முக்கியமான தகவல்களைப் பற்றி தெரிந்துகொள்ள IVR கட்டணமில்லா எண்ணை பயன்படுத்தலாம். 18002666868 இதுதான் அந்த நம்பர். நோட் செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸ் பேங்கில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?
அஞ்சல் அலுவலகத்தில் பதிவுசெய்த தொலைபேசி எண்ணை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள். இதில் இந்தி மொழியில் தகவல்களை பெற, வாடிக்கையாளர்கள் 1ஐ அழுத்த வேண்டும். இந்திய போஸ்ட் பேங்கிங் சேவைகள் மற்றும் புதிய ஏடிஎம் கார்டைப் பெறுவதற்கு 2 ஐ அழுத்தலாம். ஏடிஎம் தொடர்பான தகவல்களைப் பற்றி அறிய, 3 ஐ அழுத்தவும். வட்டி வருமானம் மற்றும் வரி விலக்கு பற்றி மேலும் அறிய, 4ஐ அழுத்தவும்.
அனைத்து சேமிப்பு திட்டங்களின் கணக்கு இருப்பு பற்றிய தகவலுக்கு, 5 ஐ அழுத்தவும். சேமிப்பு கணக்கு பரிவர்த்தனைகள் பற்றி அறிய, கணக்கு எண்ணைத் தொடர்ந்து ஹாஷ்(#) ஐ உள்ளிடவும். ஏடிஎம் கார்டைத் பிளாக் செய்ய வாடிக்கையாளர்கள் 6ஐ அழுத்த வேண்டும், மற்ற அனைத்து சேவைகளைப் பெற 7ஐ அழுத்தவும். இதுப்போன்ற பயனுள்ள பல தகவல்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.