முகப்பு /செய்தி /வணிகம் / இத்தனை நாள் இது தெரியாம போச்சே... ரூ. 95 இருந்தால் போதும் லட்சங்களில் வருவாய்!

இத்தனை நாள் இது தெரியாம போச்சே... ரூ. 95 இருந்தால் போதும் லட்சங்களில் வருவாய்!

மாதிரி படம்

மாதிரி படம்

ரூ .4.2 லட்சம் பணம் திரும்பப் பெறப்படும். மீதமுள்ள ரூ .9.52 லட்சம் முதிர்வு காலத்தில் செலுத்தப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வெறும் ரூ. 95 முதலீடு உங்களுக்கு சூப்பரான வருவாய் தரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

மிடில் கிளாஸ் மக்கள் மிகச் சிறந்த முதலீடு திட்டத்தை தேடி கொண்டிருந்தால் இதோ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் பாதுகாப்பான முதலீடு திட்டம். இந்த திட்டம் தபால் அலுவலகத்திலேயே செயல்பாட்டில் இருக்கிறது. அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் கிராம சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு மூலம் பிரீமியமாக ஒரு நாளைக்கு ரூ .95 முதலீடு செய்து ரூ .14 லட்சம் சம்பாதிக்கலாம். இதுக் குறித்த கூடுதல் தகவல் இதோ உங்களுக்காக..

குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இந்தத் திட்டத்தில் இணைவதன் மூலம் பணத்தை எளிதில் திரும்பப் பெறலாம். நாடு முழுவதும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் குறிப்பாக கிராம சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ், அடிப்படையில் பணம் திரும்பப் பெறும் சிறப்பான முதலீடு ஆகும். இந்த பாலிசி தொகையின் அதிகபட்சம் ரூ .10 லட்சம் ஆகும். இத்திட்டத்தில் மக்களுக்கு பணமும், இன்சூரன்ஸும் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தபால் அலுவலகத்தின் கிராம சுமங்கல் திட்டத்தை இரண்டு கலவரையறையுடன் எடுத்துக்கொள்ள முடியும் ஒன்று 15 ஆண்டுகள், மற்றொரு 20 ஆண்டுகள்.தபால் நிலையத்தின் கிராம சுமங்கல் திட்டத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 19 ஆண்டுகள் ஆகும்.15 ஆண்டுகள் வரையறையான காலத்திட்டத்தைப் பெற அதிகபட்ச வயது 45 ஆண்டுகள் ஆகும் மற்றும் 20 ஆண்டுகள் கொண்ட பாலிசி பெற அதிகபட்ச வயது 40 ஆண்டுகள் என நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டு காலத்திற்கு கிராம சுமங்கல் பாலிசியில் ரூ .7 லட்சம் உறுதி செய்ய, அவர்கள் மாதத்திற்கு ரூ .2,853 பிரீமியம் செலுத்த வேண்டும் அப்படியென்றால் தினமும் ரூ.95 சேமித்தால் போதும்.இவ்வாறு, 20 ஆண்டு கால பாலிசி காலத்தில் மொத்தம் ரூ. 13.72 லட்சம் லாபம் ஈட்டப்படும். மொத்தத்தில், ரூ .4.2 லட்சம் பணம் திரும்பப் பெறப்படும். மீதமுள்ள ரூ .9.52 லட்சம் முதிர்வு காலத்தில் செலுத்தப்படும். இந்த சூப்பரான திட்டத்தில் சேர இனியும் தாமதிக்காதீர்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Post Office