அதிக வட்டி.. கை நிறைய லாபம்... பணத்தை முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பெஸ்ட் ஸ்கீம்!

அஞ்சல் சேமிப்பு

பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும். பெற்றோர்கள் இந்த திட்டத்தை கவனத்தில் கொள்ளுங்கள்

 • Share this:
   

  பணத்தை சேமிக்க வேண்டும் என நினைப்பவர்கள் போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் பெஸ்ட் 3 ஸ்கீம்களை பற்றி தெரிந்து கொள்வது நிச்சயம் கைக்கொடுக்கும்.

  நல்ல வருமானம்.. கை நிறைய லாபம் இவற்றை மனதில் கொண்டு பெரும்பாலான மக்கள் அஞ்சல் சேமிப்பில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது. உண்மை தான். ஒருவேளை நீங்களும் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் கண்டிபாக நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியம் முக்கியமான 3 சேமிப்பு திட்டங்கள் இவை தான். முதலில் கிசான் விகாஸ் பத்திர திட்டம். சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் இது உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம், ஆயிரம் ரூ.1000 முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 6.9 சதவீத வட்டி கிடைக்கும். இதில் முதலீடு செய்யப்படும் தொகை 124 மாதங்களில் இருமடங்காக உயர்ந்துவிடும்.

  அடுத்தது பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஸ்கீம் சுகன்யா சம்ரிதி யோஜனா. இந்த திட்டத்தில் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்ய முடியும் இதற்கான வட்டி விகிதம் 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படுகிறது. இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும்.குறிப்பாக பெற்றோர்கள் இந்த திட்டத்தை கவனத்தில் கொள்ளுங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வீட்டில் மூத்த குடிமக்கள் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு இந்த மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் கைக்கொடுக்கும். 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு காலம் 5 வருடம். ஆண்டுக்கு 7.4 சதவீத லாபத்தினை அளிக்கிறது. ஓய்வு காலத்தில் தங்களது பெற்றோரின் முதுமை காலத்தை சிறப்பாக்க நினைக்கும் பிள்ளைகளும் இந்த திட்டத்தை துவங்கலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: