ஹோம் /நியூஸ் /வணிகம் /

பணத்தை சேமிக்க கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்!

பணத்தை சேமிக்க கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

வைப்புத் திட்டம் உங்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தை வழங்கும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  போஸ்ட் ஆபீஸ் சேமிப்பை சிறந்த சேமிப்பு என்று சொல்ல இந்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் தான் காரணம்.

  இந்திய தபால் துறை வாயிலாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் கிசான் விகாஸ் பத்திரத் திட்டமும் ஒன்றாகும். நீண்ட கால அடிப்படையில் இது நல்ல வருவாய் தரும் மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாகும். இந்த கிசான் விகாஸ் பத்திரத்தைத் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் கூட இந்த பத்திரத்தை வாங்கலாம். அவரது பெயரில் வயது வந்தவர்கள் வாங்க முடியும்.

  நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் பத்திரத்தை நீங்கள் வாங்க முடியும். இத்திட்டத்துக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய நிதியமைச்சகம் நிர்ணயிக்கிறது. அடுத்தது, ரெகரிங் டெபாசிட் திட்டம். ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். ஐந்து ஆண்டுகள் மெச்சூரிட்டிக்கு பிறகு, தேவைப்பட்டால் டெபாசிட் கணக்கை நீட்டித்துக்கொள்ளலாம். அதிகபட்ச வரம்பில்லாமல் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ .100 வைப்பதன் மூலம் தபால் அலுவலகம் மீண்டும் மீண்டும் வரும் வைப்புத் திட்டம் உங்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தை வழங்கும்.

  கடைசியாக, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு அவர்களது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கின்றன.போஸ் ஆபீசில் முன்கூட்டியே சேமித்து வைத்து ஓய்வு பெற்ற பின்னர் நிலையான வருமானம் தரும் அளவுக்கு சிறந்த சேமிப்புத் திட்டங்களும் இருக்கின்றன. ஃபிக்சட் டெபாசிட் அல்லது நிலையான வைப்பு நிதித் திட்டம் பெரும்பாலான மூத்த குடிமக்களுக்கான முதல் தேர்வாக இருந்து வருகிறது. நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் உங்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது வருடாந்திர அளவில் நல்ல வட்டி வருமானம் கிடைக்கிறது. காலாண்டு அடிப்படையில் வழக்கமான வட்டி வருமானத்தை ஈட்ட, குறைந்தபட்ச வயது வரம்பு 60 கொண்ட முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் ரூ .15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Post Office