• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • போஸ்ட் ஆஃபீஸில் பலரும் பணத்தை சேமிக்கும் திட்டத்தில் வந்த முக்கிய மாற்றம்!

போஸ்ட் ஆஃபீஸில் பலரும் பணத்தை சேமிக்கும் திட்டத்தில் வந்த முக்கிய மாற்றம்!

அஞ்சல் சேமிப்பு

அஞ்சல் சேமிப்பு

முதிர்வு காலத்தை எட்டியவுடன் வட்டியுடன் சேர்த்து ரூ.5.09 லட்சம் பெறலாம்.

  • Share this:
    பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய திட்டம் தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம்.

    சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் அஞ்சல் அலுவலகத்தில் செயல்படும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தனது மகளுக்காக சேமிப்பை தொடங்கினால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாகும்.இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம். 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1,50 லட்சம் ரூபாய் வரை இதில் சேமிக்கலாம். பொது வருங்கால வைப்பு நிதி, வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தில் கூடுதலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இதனால், பெற்றோர்களும், நீண்டகால முதலீட்டை விரும்புபவர்களும் இந்த திட்டத்தை சிறந்த முதலீட்டு திட்டமாக தேர்வு செய்யலாம்.

    செல்வமகள் திட்டத்தில் 7.6 விழுக்காடு வட்டி கொடுக்கப்படுகிறது. முதிர்வு காலமான 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் சேமிப்பு தொகையில் இருந்து 3 மடங்கு தொகை கிடைக்கும். மாதம் ரூ.1000 சேமித்து வந்தால், திட்டம் முதிர்வு காலத்தை எட்டியவுடன் வட்டியுடன் சேர்த்து ரூ.5.09 லட்சம் பெறலாம்,. இந்த சேமிப்பு தொகைக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் சேமிக்கும் பணத்தை பெண் குழந்தை 10ம் வகுப்பு முடித்திருந்தாலோ அல்லது 18 வயது பூர்த்தியடைந்திருந்தால் மட்டுமே எடுக்க முடியும் 10ம் வகுப்பு முடித்த பெண் குழந்தைகள் சேமிப்பு தொகையில் 50 விழுக்காடு மட்டுமே எடுக்க முடியும்.

    மேலும் படிக்க.. நம்பி பணத்தை போட்டால் வருவாய் உயரும்.. அஞ்சல் சேமிப்பில் இருக்கும் சூப்பர் ஸ்கீம்!

    இப்படி பல நன்மைகளை கொண்டிருக்கும் இந்த திட்டத்தில் பெற்றோர்கள் சேமித்து பிள்ளைகள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தில் சமீபத்தில் வந்த மாற்றம் என்னவென்றால், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்பும் பெற்றோர்களின் வசதிக்காக, சென்னை பொது அஞ்சல் நிலையத்தில் சிறப்புக் கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளனர். முன்பு இந்த திட்டத்திற்கு என தனியாக கவுன் ட்டர்கள் எல்லாம் இருக்காது. ஆனால் தற்போது செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்காக அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்த தகவலை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. எனவே இதுவரை இந்த திட்டத்தில் சேராதவர்கள் நேராக அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று திட்டம் குறித்து சிறப்பு கவுன்ட்டரில் விசாரித்து பின்பு இணையலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: